தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்தல்

பஷீர் சேகுதாவூத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 11:49.25 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவுத்துக்கு எதிராக விசாரணை நடத்த அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலில் கட்சியின் மரச் சின்னத்தில் போட்டியிடுவது என ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
கட்சி இவ்வாறான முடிவை எடுத்திருக்கும் நிலையில், அதன் தவிசாளர் வேறு விதமாக கருத்துக்களை வெளியிட்டிருப்பது தொடர்பில் இன்றிரவு நடைபெறும் கட்சியின் அதியுயர் பீடக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ரஜாப்தீன் தெரிவித்தார்.
ஈழப்பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 11:50.58 AM GMT ]
ஈழத்தமிழர்களுக்கிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணவேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையின் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.
ஈழப்பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதே அவர்களது நலனுக்கு உகந்தது என்றும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடு என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten