[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 02:35.20 AM GMT ]
அண்மையில் ஆளும் கட்சிக்கு தாவியவரைப் போன்று எங்களுக்கும் ஆளும் கட்சயில் இணைந்து கொண்டிருக்க முடியும். பதவியும் வரப்பிரசாதங்களும் அதிகளவில் கிடைத்திருக்கும்.
கட்சித் தாவியவரை விடவும் அதிகளவிலான பதவிகள் கிடைத்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியில் கூட முக்கிய பதவிகளை வழங்குவதாகக் கோரி அழைத்தனர்.
தற்போது அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவித்தாலும் உயர் பதவிகள் கிடைக்கும். எனினும், மக்கள் மாற்றமொன்றையே எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டாண்டு காலமாக நாம் ஏமாந்தது போதும்.பருப்பு சொகுசு உணவாக மாறியுள்ளது, மக்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் அவதியுறுகின்றனர்.
எல்லா திசைகளிலும் நம்பிக்கையிழந்த முகங்களையே காணக்கூடியதாக உள்ளது. தரம் ஒன்பதில் கூட சித்தியடையாத அமைச்சர்களே தீர்மானம் எடுக்கின்றனர். இவர்களே பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்.
கிரேக்கத்தில் தீவுகளைக் கொள்வனவு செய்யக்கூடிய அளவிற்கு சிலருக்கு பணமிருந்த போதிலும் மக்கள் பட்டியினில் வாடுகின்றனர்.
பிரபலமான முகங்கள் எமது கட்சியில் இல்லை என்ற போதிலும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியல் அமைப்புக்கு இந்தியா மட்டுமல்ல. இலங்கையும் காரணம்!- நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்!
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 02:35.34 AM GMT ]
இந்திய அழுத்தத்தின் மத்தியிலேயே 13வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் கடும் போக்காளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் 1985 - 86 ஆம் ஆண்டுகளில் இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியா இலங்கை அரசாங்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக 1940ம் ஆண்டில் டொனமூர் அரசியல் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி தேசியப்பிரச்சினைக்கு மாகாணசபைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது.
எனினும் 1955ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சொக்ஸி ஆணைக்குழு, பிராந்திய சபைத்திட்டத்தை பரிந்துரைத்தது. 1957 ஆம் ஆண்டு இதற்காக பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
ஆனால் சிங்கள அரசியல் காரணமாக இந்த உடன்படிக்கை செயலிழந்து போனதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten