[ புதன்கிழமை, 31 யூலை 2013, 06:49.25 AM GMT ]
கடந்த சில வாரங்களாக வட மாகாணத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே போலி நாணயத் தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, வடக்கில் போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் நடத்தப்படவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள சகல வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்களுக்கே இந்தச் செயலமர்வு நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 06:28.21 AM GMT ]
படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த போது கைது செய்து கடற்படையினர் இவர்களை திருகோணமலைக்கு கொண்டு செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இதனோடு தொடர்புபட்ட மூன்று வான் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten