தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

இராணுவம் தெரிவு செய்த தயா மாஸ்டர், சீராஸ், ஜனா ஆகியோருக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள யாழ். மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:00.08 AM GMT ]
வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ். மாவட்டத்திற்கான 19 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுத்தாக்கல் ஐந்து மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று காலை 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரகலிங்கம் தலைமையிலும்,
வவுனியா மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலும்,
மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

யாழ். மாவட்ட வேட்பாளர்கள் விபரம், 
தமிழரசுக்கட்சி சார்பில் சி.வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) ,   சீ.வீ.கே.சிவஞானம்,  பாலச்சந்திரன் கஜதீபன்,  ச. சுகிர்தன், எ.ஆனந்தி, எஸ்.சயந்தன், எஸ். பரஞ்சோதி,  எஸ். சிவயோகம், ஆர்.ஆர்னோல்ட் ஆகியோரும்,
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பாக,  எம். சிவாஜிலிங்கம்,  விந்தன் கனகரத்தினம்,  எஸ். குகதாஸ் ஆகியோரும்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பாக தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,
தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தம்பிப்பிள்ளை தம்பிராசா,  கந்தப்பு தர்மலிங்கம் ஆகியோரும்,
தமிழீழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) சார்பில் எஸ்.சர்வேஸ்வரன்,  எஸ். ஐங்கரநேசன், ஆர். ஜெயசேகரம், என்.வி. சுப்பிரமணியம் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.
இராணுவம் தெரிவு செய்த தயா மாஸ்டர், சீராஸ், ஜனா ஆகியோருக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 10:00.01 PM GMT ]
வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இராணுவம் தெரிவு செய்திருந்த வேட்பாளர்கள் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல இரும்பு வர்த்தகர் சீராஸ் என்பவரது கைக்கூலிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று வீதிமறியல் போராட்டத்தை நடத்தியிருந்த நிலையில் பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
இராணுவத்தினரால் வழங்கப்பட்டிருந்த வேட்பாளர்களான தயா மாஸ்டர், சீராஸ், ஜனா போன்ற வேட்பாளர்களது பெயர்கள் சுதந்திர கட்சியின் வேட்பாளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், சீராஸ் என்பவரால் பணத்திற்கும், ஏமாற்றியும் அழைத்து வரப்பட்ட மக்களைக் கொண்டு இன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வீதி மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவட்டச் செயலகத்தில் பொருட்கள் கொடுப்பதாக ஏற்றி வரப்பட்ட மக்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பணத்திற்காகவும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் சீராஸை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோசத்தை எழுப்புமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் கூவிக் கொண்டிருந்தனர்.
மேலும் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள வீதியை முழுவதுமாக மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வீதியில் ரயர்களை போட்டு கொழுத்தவும் இவர்கள் முயன்றனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் அமைதி காத்தனர்.
சட்டப்படி தேர்தல் வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் மாவட்டச் செயலக சுற்றாடலில் கூட்டமாக நிற்பதே தவறு.
ஆனால் வீதியை மறித்து வீதியில் ஆடி, வீதியில் படுத்து கூத்தாட பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனர் என மேலும் யாழ் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten