தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

தமிழர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டுமே: பா.அரியநேத்திரன்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டர், சீராஸ் பெயர்கள் இடம்பெறவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:14.35 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் நேற்று சனிக்கிழமை சுதந்திரக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் சீராஸின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட தயா மாஸ்டர், வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததுடன், வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுதந்திரக் கட்சியினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார்.
யாழ். சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் நேற்று சனிக்கிழமை அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில தயா மாஸ்டரின் பெயர் இடம்பெறவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ், சாவற்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத் தலைவர் அகிலதாஸ், யாழ்.மாநரசபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ்.கதிரவேல் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் யாழில் போட்டியிடும் குறித்த எழுபேரும் இன்று கையொப்பம் இடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
தயா மாஸ்டரின்  பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அரச ஆதரவுடன் தயா மாஸ்டர் சுயேட்சைக் குழுவாக களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், யாழ் மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான, தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை பிரச்சாரப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்த எம்.எம் சீராஸின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டுமே: பா.அரியநேத்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:47.12 AM GMT ]
தமிழ் மக்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டும்தான் அதனை தமிழ் பிள்ளைகள் இறுகப்பற்றிப் பிடிக்க வேண்டும் என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துரை வடக்கில் பிரித்தானியா எனின்தரோ பல்கலைக்கழக மாணவர்களினால் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை திறப்புவிழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இன்று தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இரண்டு விடயங்கள்தான் அதில் ஒரு விடயம் தமிழ் தேசிய உணர்வு மற்றது கல்வி கற்க வேண்டும் என்ற உணர்வு இந்த இரண்டு விடயங்களுமே இன்று தமிழர்களின் அடையாளமாகவுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல ஆயுதங்களை கையில் எடுத்திருந்தாலும் இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற ஆயுதம் கல்வி என்ற ஆயுதம் மட்டுமே.
அந்த வகையில் தமிழர்களின் கல்வியை விருத்தி செய்யும் நோக்குடன் இவ்வாறான பாலர் பாடசாலையை திறப்பதற்கு முன்வந்துள்ள பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களை தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் பாராட்டி வரவேற்கின்றோம்.
இதேபோன்று இங்குள்ள பெற்றோர்கள் வெறுமனே அபிவிருத்தி, சலுகைகள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்காமல் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களை எதிர் காலத்தில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வளர்த்தெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் அதன் ஊடாகவே தமிழினம் எதிர்காலத்தில் சுயமாக தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக இருக்கும் என்றார்.
கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் திரு. சசிதரன் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழா நிகழ்வில் வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten