மட்டு. அரச திணைக்களங்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதம்! திணறும் அதிகாரிகள்- திறமைக்கு மதிப்பளிக்காமை குறித்து தமிழ் இளைஞர், யுவதிகள் கவலை
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:44.23 PM GMT ]
இதனால் சிங்களம் தெரியாத தமிழ் அரச உத்தியோகஸ்தர்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிச் சிங்களத்தில் கடிதங்கள் வருவதானால் அதனை மொழி பெயர்ப்பு செய்வதற்கு இன்னுமொரு இடத்தினை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தமது நேர விரயம், வேலை தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திறமைக்கு மதிப்பளிக்காமை குறித்து தமிழ் இளைஞர், யுவதிகள் கவலை
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பொலன்நறுவையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவில் தமிழ் இளைஞர், யுவதிகளின் சாதனைகளுக்கு மதிப்பளிக்கப் படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் தேசிய சாதனைககுக்கு உரிய பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படாமையாது மிகுந்த வேதனையளிப்பதாக வடகிழக்கினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் இளைஞர், யுவதிகள் தெரிவிக்கின்றனர்.
அம்பாந்தோட்டை, குருணாகல், காலி, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த இளைஞர் யவதிகளுக்கு மேற்படி சாதனைகளுக்குரிய விருதுகள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 25 வது விளையாட்டு விழாவில், மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையிலுள்ள அனைத்து இளைஞர் கழகங்களும் பங்கு கொண்டு தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாணசபைத் தேர்தல்! யாழில் போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 03:01.10 PM GMT ]
எதிர்வரும் செப்படம்பரில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்லில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்தலில் ஏனைய கட்சிகளை இணைத்துக் கொள்ளாமல் தனித்து போட்டியிட கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்ததாகவும், நாளைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதன்படி முதன்மை வேட்பாளராக தி.துவாரகேஸ்வரன் மற்றும் என்.சதானந்தன், பி.கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ்.தியாகேந்திரன், கே.தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு.காஜன், வி.தயாபரன், எ.இயஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜா, கே.தனுஸ்குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten