தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் குறித்து கணிப்பீடு- பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக் கூறி கப்பம் பெற்ற குழு கைது


தயாசிறி ஜயசேகர அரசியல் வீணர்!- விக்ரமபாகு கருணாரட்ன கிண்டல்! - தோல்வியை தவிர்க்கவே அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கின்றது!- ஜோசப் மைக்கல் பெரேரா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 10:28.17 AM GMT ]
தயாசிறி ஜயசேகர என்பவர் அரசியல் வீணர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஆனால் தயாசிறி, அரசியல்வாதி என்றால் என்ன என்ற தெளிவான கொள்கை கொண்ட மக்களின் பிரதிநிதி. 24 மணிநேரத்தில் அவர் தனது கொள்கையை மாற்றி கொண்டுள்ளார்.
மக்களின் வாக்குகளை பிச்சை எடுப்பதற்காக தயாசிறி போன்ற நபர்களை அரசாங்கத்துடன் இணைத்து கொள்கின்றனர். அவர்களுக்கு மக்களிடம் வாக்கு பிச்சை எடுக்கும் சிறந்த திறமைகள் உள்ளன.
வீதிகளில் பிச்சை எடுப்பவர்கள், மக்களிடம் இருந்து பணம் பெறுவதற்காக பல வருத்தங்களை வெளிகாட்டுவார்கள்.
அதேபோன்று தயாசிறி ஜயசேகர மேடைகளில் பாட்டு பாடி, நடனமாடி மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அரசாங்கத்தில் இருக்கும் திருடர்கள், சண்டியர்கள், ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகளை உரிய தகவல்களுடன் வெளியிட்ட தயாசிறி ஜயசேகர இன்று அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார் என்றார்.
எதிர்வரும் தேர்தலில் அடைய போகும் தோல்வியை தவிர்க்கவே அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கின்றது - ஜோசப் மைக்கல் பெரேரா
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் அடையவிருக்கும் படுதோல்வியை தடுப்பதற்கே, மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் செயல்களை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்த தயாசிறி ஜயசேரவை அரசாங்கம் தம்பக்கம் இழுத்து கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஏற்படும் தோல்வியை தவிர்க்க தயாசிறி ஜயசேகரவை அரசாங்கம் தன் பக்கம் எடுத்தது. அப்படியில்லை என்றால் அவருக்கு சிறந்த அமைச்சு பதவியை வழங்கப்பட்டிருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்ற குருணாகலையை சேர்ந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்கள் தான் தயாசிறிக்கு தற்போது பெரும் சவாலாக உள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சில பலமிக்க அமைச்சர்களின் புதல்வர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை தென் மாகாண சபையின் உறுப்பினர்கள், அமைச்சர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.
ஆனால் போதைப் பொருள் விற்பனை மன்னர்கள், தங்காலை பிரதேச சபை தலைவர் போன்றவர்கள், ஆசிரியையை மண்டியிட வைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள்.
இம்முறை தேர்தலில் அரசாங்கத்தினால் மத்திய மாகாணத்தையும் கைப்பற்ற முடியாது என்ற காரணத்தினால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் பக்கம் இழுத்து, நாட்டின் பிரச்சினைகளை மறைத்து விட்டு மக்களின் பணத்தை வீண்விரயம் செய்து தேர்தலை நடத்துகிறது.
மிஹின் லங்கா, எயார் லங்கா, மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நஷ்டத்தில் இயங்கி வருவதாக கோப் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் குறித்து கணிப்பீடு- பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக் கூறி கப்பம் பெற்ற குழு கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 10:39.57 AM GMT ]
மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களின் போது இணைத்துக் கொள்ளப்படவுள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கணிப்பீடு ஒன்று நடத்தப்பபடவுள்ளது.
இதன்படி, அரசாங்க அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் அனைத்து அமைச்சர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.
அதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயம் அல்லது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அறிக்கைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு உறுப்பினர்கள் தங்கிள்ன வானங்களை இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்று கெபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுனர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக் கூறி கப்பம் பெற்ற குழுவினர் கைது
பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பல நபர்களிடம் கப்பம் பெற்று வந்த குழுவொன்றை காலி வந்துரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
7 பேர் கொண்ட இந்த குழுவில், களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
சிறைச்சாலையில் இருந்து, பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் எனக் கூறி, பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவில் உள்ள நபர்களில் பெயர்களை கூறி, அவர்களின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து, தம்மை தொடர்பு கொள்ளுமாறு சந்தேக நபர்கள் உத்தரவிட்டு வந்துள்ளனர்.
இதனை நம்பிய பல பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் குறிப்பிடம் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அதனை அவர்களிடம் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் வழங்கிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தம்மை பொலிஸ் உயர் அதிகாரிகள் என்று கூறி பணத்தை வழங்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் ஒருவர் 2009 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளையடித்த குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் எனவும் இவர், சிறையில் இருந்தவாறே கப்பம் பெறும் குற்றச் செயலை வழி நடத்தி வந்துள்ளார்.
கடந்த 7ம் திகதி விடுதலையான அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Geen opmerkingen:

Een reactie posten