[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 11:21.25 AM GMT ]
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டிபன் கார்பர் கலந்துகொள்வார் என இலங்கை அரசாங்கம் இன்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுநலவாய அமைப்பிலுள்ள 54 நாடுகளில் 85 சதவீதமானவை தமது பங்குபற்றலை உறுதிப்பத்தியுள்ளது
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெரிடே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை அகதிகள் கொக்கோஸிலிருந்து, கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 11:04.14 AM GMT ]
இலங்கை அகதிகள் 68 பேர் அண்மையில் கொக்கோஸ் தீவுக்குச் சென்றிருந்த நிலையில் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விசாரணை ஏற்பாடுகளின் மத்தியில் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரத்துறை மற்றும் குடியுரிமை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே. கடந்த வருடமும் தமது நாட்டு எல்லையை மீறி சட்டவிரோத குடியேறிகள் இலங்கையிலிருந்து வந்ததாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது இலங்கையில் நிலவும் சமூக சூழ்நிலைகளுக்கு அமைவதாக அவர்கள் மீண்டும் நாடுதிரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
முறையான புகலிடம் கோரி எதேனும் ஒரு படகு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியவுக்கு வந்திருக்குமாயின் பப்புவா நிவ்கினிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten