தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

13வது திருத்தம் தொடர்பில் இந்தியா உறுதியுடன் உள்ளது!- அமைச்சர் நாராயணசாமி

பௌத்த பிக்குகள் இன்மையினால் விஹாரைகளுக்கு மூடு விழா- மதத்தின் பெயரால் நாட்டுக்கு தீமூட்ட முயற்சி: டிலான் பெரோ
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 02:24.48 AM GMT ]
பௌத்த பிக்குகள் இன்மையினால் விஹாரைகள் மூடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் சுமார் 400 பௌத்த விஹாரைகள் மூடப்பட்டுள்ளதாக பௌத்த விவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விஹாரைகள் காணப்படுகின்றன. இவற்றில் 400 பௌத்த விஹாரைகள், பௌத்த பிக்குகள் இன்மையினால் மூடப்பட்டுள்ளது என பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் சந்திரப்பெரும கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூடப்பட்ட பௌத்த விஹாரைகளில் அதிகமானவை வடக்கு கிழக்கில் அமைந்துள்ளவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஹாரைகளை மீளவும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் கோரினால் குறித்த விஹாரைகளை மீளவும் அங்குரார்ப்பணம் செய்து ஒப்படைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதம் என்ற போர்வையில் சிலர் நாட்டக்கு தீ மூட்ட முயற்சிக்கின்றனர்: டிலான் பெரோ
மதம் என்ற போர்வையில் சிலர் நாட்டுக்கு தீ மூட்ட முயற்சித்து வருவதாக வேலைநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மதம் என்ற போர்வையில் வீரனாகக் காட்டிக்கொள்வதனை விடவும், இனவாதமற்ற பைத்தியக்காரன் என்ற பெயர் நன்மையானதே.
எந்தக் காலத்திலும் இனவாதத்தை ஆதரிக்கப் போவதில்லை. கொள்கை அடிப்படையில் மதவாதம் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சிலர் மதங்களின் பெயரால் பலசேனாக்களை அமைத்துக் கொண்டு நாட்டை தீ மூட்ட முயற்சிக்கின்றனர்.
நாட்டில் மீண்டும் போரை உருவாக்க இந்த பலசேனாக்கள் முயற்சிக்கின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கும் போது பலசேனா அமைப்புக்கள் என்னை பைத்தியக்காரன் என அடையாளப்படுத்துகின்றன.
இனவாதக் கொள்கைகளைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்துவதனை விடவும் பைத்தியக்காரனாக வாழ்வது மேல்.பெளத்த மதத்தை இழிவுபடுத்தும் இந்த பலசேனாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இந்த பயங்கரவாத இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க்க் கூடாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளை ஹலியல பிரதேச பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
பொது பலசேனா அமைப்பு நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பதுளை ஹாலி -எல பிரதேசத்தில் பள்ளி வாசல் ஒன்றில் நடைபெற்ற இப்தார் வைபத்தில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அமைப்புகள் நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வரும் போது, நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போது, இதனை தாங்கி கொள்ள முடியாத பலசேனா அமைப்பு டிலான் பெரேராவுக்கு விசர் பிடித்து விட்டது எனக் கூறுகிறது.
மதத்தின் பெயரில் வீரர்களாக தம்மை இனங்காட்டி கொள்வதை விட, மனநோயாளியாக இருப்பது சிறந்தது. மதம் என்ற பெயரில் பல சேனா போன்ற அமைப்புகள் நாட்டை தீயிட்டு வருகின்றன.
பதுளை ஹாலி - எல பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் இவ்வாறான அமைப்புகளுக்கு இங்குள்ள மக்கள் இடமளிக்க மாட்டார்கள். டிலான் பெரேராவும் அதற்கு இடமளிக்க மாட்டேன்.
இனவாத அமைப்புகள் நாட்டை ஆபத்தில் தள்ள இடமளிக்க முடியாது. இறுதியில் இவர்கள் எதுமில்லாமல் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் இந்த பயங்கரவாதிகளை நாம் அடையாளம் காண வேண்டும். இவர்களே நாட்டை மீண்டும் ஒரு யுத்தத்தை நோக்கி இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர்.
புத்த பகவான் இப்படி செய்யுமாறு போதிக்கவில்லை. புத்தர் காலத்தில் வாழ்ந்த பௌத்த பிக்குகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மதத்தை தமது தேவைகளுக்கு பயன்படுத்தியதில்லை.
புத்த பகவான் சகல மதங்களை மதித்தார். எவருக்கும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று பலசேனா அமைப்பு ஏனைய மதங்களுக்கு எதிராக இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இறைச்சி கடைகளிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு லொறிகளை தீயிடுகின்றனர். கடைகளை உடைக்கின்றனர். வேறு மதங்களை சேர்ந்தவர்கள் போதனைகளை நடத்த இடமளிப்பதில்லை. இவர்களில் இந்த நடவடிக்கை பௌத்த மதத்தை இழிவுப்படுகிறது. அகிம்சையான பௌத்த மதத்தை பலசேனா அமைப்புகள் சீரழித்து வருகிறது என்றார்.
13வது திருத்தம் தொடர்பில் இந்தியா உறுதியுடன் உள்ளது!- அமைச்சர் நாராயணசாமி
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 01:29.08 AM GMT ]
இலங்கையில் 13வது அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட இந்தியா இடமளிக்காது என்று மத்திய அமைச்சர் வி நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten