தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

மட்டக்களப்பில் தாயும் மகளும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி! தடுத்து நிறுத்திய பொலிஸார்

வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து நாட்டைவிட்டு வெளியேறத் தடை
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 11:47.12 AM GMT ]
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்து குணவர்தன நாட்டிலிருந்து வெளியேற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடுவெல நீதிவான் நீதிமன்றினால் ரவிந்துவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பம்பலபிட்டி முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் கொலை வழக்கிலும் குற்றப் புலனாய்வு பிரிவினர் ரவிந்துவை தேடி வருகின்றனர்.
இந்நிலையிலேயே கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் தாயும் மகளும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி! தடுத்து நிறுத்திய பொலிஸார்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:19.57 PM GMT ]
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொது மயானத்தில் உள்ள பற்றைக் காட்டில் இருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முற்பட்டவேளை , அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை வேளையில் குடும்பத்தகராறு காரணமாக கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச் சேர்ந்த தாயும் மகளும் மேற்படி பொது மயானத்தில் அமைந்துள்ள பற்றைக்காட்டில் நின்ற மரம் ஒன்றில் இருவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசார் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து, மகிழடித்தீவு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பலத்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten