அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்டவர்கள் ஏறாவூரில் கைது - அக்கரைப்பற்றில் இந்திய பிரஜையொருவர் கைது
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 05:40.36 AM GMT ]
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே மூவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் மூவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழக்கிலிருந்து கடல் மார்க்கமாக இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்திருந்தனர் என்றும் விசாரணையின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இந்திய பிரஜையொருவர் கைது
தமிழகத்தை சேர்ந்த 30 வயதான நபர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, சுற்றுலா வீசா அனுமதியில் சென்றிருந்த அந்த நபர், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த்தாக பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வாய்மொழி மூல சாட்சியமளிக்க சந்தர்ப்பம்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 04:59.31 AM GMT ]
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் ஆராயும் நோக்கில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் எழுத்து மூலம் சாட்சியமளிக்கும் கால அவகாசம் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களினதும் தனித்துவ அடையாளங்களை பேணிப் பாதுகாத்து, ஒரே இனமாக கௌரவமாக வாழக்கூடிய பின்னணியை ஏற்படுத்தும் ஓர் முயற்சியாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினை அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சாட்சியமளிக்க விரும்புவோர் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக சாட்சியமளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது
Geen opmerkingen:
Een reactie posten