[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:24.28 AM GMT ]
மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை செய்தியாளர் சந்திப்பின்போது சுமத்தியுள்ளார்.
கொக்கோஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 68 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து இலங்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தற்போதைய ஆட்சியில் அது மிகவும் மோசமாகியுள்ளது.
இந்தநிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முயற்சிக்காமல் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை ஹக்கீம் எடுத்திருப்பது தவறான விடயம் என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து வாக்கு கேட்டால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தனித்து வாக்கு கேட்டு வாக்குகளை பெற்ற பின்னர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் உத்தியையே ஹக்கீம் கடைப்பிடித்து வருகிறார்.
இதனையே அவர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் கடைப்பிடித்தார் என்று முஜீபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்மஸ்தீவுக்கு அழைத்து செல்லப்பட்ட 68 இலங்கையர்களும் சில நாட்களில் நாடு கடத்தப்படுவர்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:16.48 AM GMT ]
கொக்கோஸ் தீவிலிருந்து விமானம் மூலம் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த இவர்கள், விசாரணைகள் மற்றும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும், எதிர்வரும் சில தினங்களில் இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இக்குழுவினர் விசாரணை மற்றும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவிலோ அல்லது பப்புவா நியூகினி தீவிலேயோ குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவ்வாறானவர்களை பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்புவது தொடர்பில் கடந்த 19ம் திகதி இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமைய முதலாவது குழுவினர் பப்புவா நியூகினிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் வரும் இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பாவிட்டால், அவர்கள் பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten