தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

மேர்வின் சில்வாவின் மகனை தாக்கியது ராஜபக்ஷவின் மகன்மாரா...?

தவறுகளை திருத்திக்கொள்ளாதவர்களை வீட்டுக்கு அனுப்பும் உரிமை மக்களுக்கு உண்டு: நிமால்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 08:00.23 AM GMT ]
தமது தவறுகளை திருத்திக் கொள்ளாது அரசாங்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அனுராதபுரம் மகாவிளைச்சி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்,
ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி உட்பட எதிர்க்கட்சிகள் பலமிழந்திருப்பதால் அரசாங்கமே அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்சிகள் தமதுக்குள் சண்டையிட்டு கொள்கின்றன. நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் முழுமையான விளக்கங்களையோ, விமர்சனங்களையோ முன்வைப்பதில்லை.
எதிர்க்கட்சிகள் தமது சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்டு, அரசாங்கத்திற்கு என்ன நடக்க போகிறது என்பதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன.
இதனால் அரசாங்கத்தில் இருக்கும் நாமே அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் தவறு செய்யும் அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர். சுதந்திரக்கட்சியினர் என்ற வகையில் அந்த கட்சியில் உள்ளவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது கட்சியினரின் கடமை.
தவறுகளை திருத்திக் கொள்ளாது போனால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க மக்களுக்கு உரிமை உள்ளது என்றார்.

மேர்வின் சில்வாவின் மகனை தாக்கியது ராஜபக்ஷவின் மகன்மாரா...?
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 06:50.27 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா, இராணுவ குழுவொன்றில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது போதும், ராஜபக்ஷவினரின் மகன்மாரே அவரை தாக்கியிருப்பர் என்பதில் சந்தேகமில்லை என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
மாலக்க சில்வா, இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரை மாலக்கவின் பாதுகாப்புக்கு வழங்கியதுடன், மாலக்கவின் பயணத்திற்காக டிபெண்டர் வாகனம் ஒன்றையும் வழங்கியிருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் ராஜபக்ஷவினரிடம் மட்டுமே, மாலக்க சில்வா மீது நடத்தும் அளவுக்கு பலமிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை புனித தோமஸ் கல்லூரி சமகால நண்பர்களான மாலக்க மற்றும் நாமால் இடையில் தனிப்பட்ட ரீதியான கோபங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பு நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராக்களில் தாக்குதல் சம்பவம் சம்பந்தமான காட்சிகள் பதிவாவில்லை என்பது இந்த சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அமைச்சர்களின் மகன்மார தாக்கி விட்டு, தப்பிச் செல்லும் ஆயுத குழுக்கள் செயற்படும் நிலையில், நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் எந்த விதத்திலும் திருப்தியடைய முடியாது என கூறினார்.
இந்த தாக்குதல் தொடர்பில் யாரை சந்தேகிக்கின்றீர்கள் என இதன் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அத்தநாயக்க, இவ்வாறான தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்வும், பொலிஸாரினால் சந்தேக நபர்களை கைதுசெய்யாத வகையில் யார் தாக்குதல்களை வழி நடத்துவார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் அதில் மக்களுக்கு சந்தேகமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten