[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 01:32.40 PM GMT ]
பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பர் வாகனம் பாதையை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவில் மற்றுமொரு படகு தஞ்சம்: 68 பேரும் இலங்கையர் எனச் சந்தேகம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 11:16.57 PM GMT ]
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் படகிலிருக்கும் அனைவரும் இலங்கையர்களென்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அதன் பணிப்பாளர் சியுநைட் தெரிவித்தார்.
கைதாகியுள்ள 68 புகலிடக் கோரிக்கையாளர்களும் மருத்துவ சோதனைகளுக்காக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் முறையான பரிசீலனையை தொடர்ந்து பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவதுடன் ஏனையவர்கள் தமது தாய்நாட்டிற்கே திருப்பியனுப்பப்படுவரெனவும் அவர் இன்று கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சேவைகள் பணிப்பாளர் சியுநைட் (SUERNIGHT) தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,
அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தானது என விளக்கமளித்தார். அவுஸ்திரேலியா நோக்கி வந்த பலர் ஆழ்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாரம் இந்தோனேசியக் கடற்பரப்பில் மூழ்கிய படகில் 09 பேர் வரை உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. பலரைக் காணவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே அவுஸ்திரேலியா போகும் ஆசையில் விஷப் பரீட்சையில் இறங்காதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவுஸ்திரேலியாவின் தெற்காசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர், ஜொஸ் அல்வரன்ஸ்,(JOSE ALVAREI) நடை முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாது. ஆகையினால் ஆட்கடத்தல்காரர்களிடம் இனிமேலும் விலைபோகாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
சிலர் சட்டவிரோதமாக இங்கு வந்துள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்களது உறவுக்காரர்களும் வர எத்தனிப்பது மூடத்தனமான செயலாகும். காரணம் இங்கிருப்பவர்கள் விரைவில் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவர் அத்துடன் அவர்கள் ஆட்கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்ததையிட்டு வருத்தம் தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten