தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

யாழில் மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

மட்டு. சமுர்த்தி வங்கி கொள்ளை தொடர்பில் கைது செய்யப்பட்ட காவலாளி பிணையில் விடுதலை
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:03.48 AM GMT ]
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உடைக்கப்பட்டு கணனி கொள்ளளையடிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட பிரதேச செயலக இரவு காவலாளி நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரவுக் காவலாளியை நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியதற்கிணங்க ஐயாயிரம் ரூபா காசுப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 02.10.2013ம் திகதி இடம்பெறும் என்றும் அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலக வளாகத்தில் உள்ள சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வங்கியில் பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேசை லாச்சிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிச் சங்கத்திற்கு சொந்தமான கணனி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்தே பிரதேச செயலக இரவு காவலாளி கைது செய்யப்பட்டிருந்தார்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 11:53.37 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்; பதிவு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஐந்தாம், ஆறாம் மாதங்களில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten