தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

நவநீதம்பிள்ளை இலங்கை விமானப்படை விமானத்தை பயன்படுத்த மறுப்பு

பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசம்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 01:05.55 AM GMT ]
பாப்பரசர் பிரான்ஸிஸ் அடுத்து வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஒப் இஸ்ரேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த விஜயம் அமையுமானால் அது இலங்கைக்கு செல்லும் மூன்றாவது பாப்பரசராக பிரான்ஸிஸ் கருதப்படுவார்.
1977ம் ஆண்டு முதன்முறையாக நான்காவது போல் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
1995ம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக அவர் குண்டு துளைக்காத வாகனத்திலேயே இலங்கையில் பயணம் செய்யவேண்டியிருந்தது.
நவநீதம்பிள்ளை இலங்கை விமானப்படை விமானத்தை பயன்படுத்த மறுப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 12:38.22 AM GMT ]
இலங்கைக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது வன்னிக்கான பயணத்தின் போது இலங்கை விமானப்படை விமானத்தை பயன்படுத்தலாம் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் ஆகஸ்ட் 25ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரை இலங்கையில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய, ஐ,நா மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம்  இலங்கை வந்திருந்தது.
இலங்கைக்கு வரவுள்ள நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொண்டிருந்தனர்.
ஆனால், இலங்கை அரசாங்கம், தனது விமானப்படை விமானங்களில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.
இலங்கை  விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அல்லது உலங்குவானூர்திகளில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகளிடம், இலங்கையின் உயர்  பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.
இந்தக் குழுவினர், விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு,  போரின் பின்னர் இலங்கை விமானப்படையால் திருத்தியமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இரணைமடு ஓடுதளம் வழியாகவே பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி மூலமே போர்க்களப் பகுதிக்குச் சென்றதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பான் கீ மூன் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி பயணம் பலத்த சர்ச்சைக்குள்ளாகியதால், இலங்கை விமானப்படை விமானத்தில் நவநீதம்பிள்ளை குழுவினர் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அச்சமின்றிப் பயணம் செய்ய முடியும் என்று ஐ.நா அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணிக்கும் யோசனையை ஐ.நா குழு நிராகரித்து விட்டது.

இலங்கை விமானப்படை விமானத்தில் பயணம் மேற்கொள்வது தவறான விம்பத்தைக் காட்டும் என்பதால், ஐ,நா இந்த வாய்ப்பை விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை விமானப்படை, நவநீதம்பிள்ளை குழுவினருக்கு வை -12 விமானத்தை ஒழுங்கு செய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten