தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

தயாசிறிக்கு எதிராக வழக்குத் தொடர ஹரின் பெர்னாண்டோ முயற்சி

ஸ்ரீலங்கன் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டமை குறித்து விசாரணை தொடர்கிறது!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 03:34.09 PM GMT ]
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தரையிறக்கப்படும் போது கடந்த வாரம் சேதமடைந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான தளத்தில் கடந்த வாரம் தரையிறக்கப்பட்ட விமான பாதிப்புக்குள்ளானதாக பொது விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ரொஹான் தலுவத்த தெரிவித்தார்.
விமானியின் பிழையான செயற்பாடே விபத்துக்கான காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தரையிறக்கப்பட்ட தருணத்தில் சேதம் ஏற்பட்ட விதம் தொடர்பான கணிப்புகளை பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருக்கு மேலதிக கணிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளாதாகவும் தலுவத்த தெரிவித்தார்.
இதேவேளை, அபுதாபியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானமொன்றிலிருந்து ஒடுபாதையில் வீழ்ந்த பாகம் ஒன்று தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அபுதாபிலிருந்து வானூர்த்தி புறப்பட்டதன் பின்னர் அதுகுறித்து அதிகாரிகளினால், கட்டுநாயக்க விமான தளத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விமானம் இலங்கையில் இடையூறுகளின்றி தரையிறக்கப்பட்டது.
தயாசிறிக்கு எதிராக வழக்குத் தொடர ஹரின் பெர்னாண்டோ முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 03:42.01 PM GMT ]
அரசாங்கத்திற்கு கட்சி தாவியது மடடுமன்றி ஐதேகவை அவதூறாக பேசியமை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக தயாசிறி ஜயசேகரவுக்கு 25 கோடி ரூபா பெற்றுக் கொண்டமையை தாம் ஆதாரத்துடனேயே கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற வரப்பிரதாசங்களுக்கு அமையவே தயாசிறி தொடர்பில் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது..
ஐக்கிய தேசிய கட்சித் தரப்பினரால் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தயாசிறி ஜயசேகரவினால் கூற முடியுமானால், நாங்கள் ஏன் அவருக்கு எதிராக சில வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.
தற்போதைய நிலையில், அவரது தனிப்பட்ட பணிகளை மேற்கொண்டால் மிகுதியை நீதிமன்றத்தில் நாங்கள் பார்த்துக்கொள்ள முடியும் என்று ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்துடன் தாம் இணைந்து கொள்வதற்கு 25 கோடி ருபா லஞ்சமாக பெற்றதாக தெரிவிக்கும் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.
சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஒருவர் கட்சியிலிருந்து விலகினால் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த கூடாது.  எனவே, அவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்பேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் தினமும் இதனைத் தான் செய்தார்கள். நான் நாடாளுமன்றத்தில் இருந்து விலகி, மாகாண சபையில் போட்டியிடவே வந்திருக்கின்றேன் என்றார் தயாசிறி.

Geen opmerkingen:

Een reactie posten