[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 07:38.45 AM GMT ]
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த ஆலோசனைக்கு அமைய ஆணைக்குழுவின் பதவிக்காலம், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 2002 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் நடந்த சம்பவங்ள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வந்தால் அவரை வரவேற்போம்: தயாசிறி ஜயசேகர
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:55.19 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை நியமித்தமையை நான் பாதகமாக பார்க்கவில்லை.
அதனை நாங்கள் ஆரோக்கியமற்ற ரீதியில் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை.
அவர் வட மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றால் அரசாங்கத்துடன் நல்ல முறையில் இணைந்து செயற்படுவார். நீதியரசர் என்ற வகையில் அவரை நாங்கள் கௌரவிக்கின்றோம்.
விக்னேஸ்வரன் வடக்கின் முதலமைச்சராக வருவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. எனவே அவர் முதலமைச்சராக வந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தயாசிறி ஜயசேகர என்ற அரசியல்வாதி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிவிட்டார் என்பதற்காக தேசியப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான நிலைப்பாடு எப்போதும் மாற்றமடையாது.
தமிழ் மக்களுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நீதியானதும் நியாயமானதுமான தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten