[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:45.24 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் லீசிங் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொக்குவில் பகுதியிலுள்ள ஒருவர் லீசிங் நிறுவனத்திடம் கார் ஒன்றைப் பெற்றுள்ளார்.
இவரது வீட்டிற்கு சென்ற தென்னிலங்கை குழுவொன்று தவணைப் பணத்தை உரிய காலத்தில் செலுத்த வில்லை என்று கூறி காரை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆயினும், உரிமையாளர் விட்டுக்கொடுக்காத காரணத்தினால் யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருடன் வந்து காரை பறித்து சென்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பில் குறித்த லீசிங் நிறுவனத்திடம் உரிமையாளர் வினவியபோது தாம் அப்படி செய்யவில்லையென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் லீசிங் வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை இவ்வாறான கொள்ளைகளும் அதிகரித்துள்ளன.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்!- பொதுநலவாய சட்டத்தரணிகள்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:45.00 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் பிரதி தலைவர் எலக்ஸ் வார்ட் இதனை த ரேடியோ நியுசிலாந்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு, 50 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் ஒன்றிணைந்து, இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர்.
எனினும் இந்த தீர்மானத்தை பொதுநலவாய நாடுகளின் அமைப்பு ஏற்கன மறுத்திருத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் பிரதித்தலைவர், குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதால், இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட மீறல்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் யுத்த குற்றங்கள் என்பவற்றை, சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் யுத்தக் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாத எந்த நாடும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டுக்கு செல்ல கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten