தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை

மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு உளவியல் பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 02:03.34 AM GMT ]
நாட்டின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு உளவியல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்தில் ஒருவர் உளவியல் அழுத்தங்களினால் அவதியுறுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட முதலாவது உளவியல் சார் ஆய்வு மதிப்பீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அதிக அழுத்தம், அதிக யோசனை மற்றும் பிற காரணிகளினால் அதிகளவான மக்கள் உளவியல் சார் நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
நோய்களினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை எனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 03:21.14 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்டைய கலை கலாசாரங்களையும் அழிந்த பழமையான விடயங்களை ஆவணப்படுத்தி இணையத்தளம் மூலம் எதிர்கால சந்ததியினர் அறியும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஜனாதிபதியின் கிழக்கு ஆலோசகரின் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்விமான்கள்,புத்திஜீவிகள்,கலாசார உத்தியோகத்தர்கள்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அவற்றினை பாதுகாக்க தவறியமை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்க்கை முறைமை, வாழ்க்கை முறைமை, இலக்கிய படைப்பு, பேச்சு வழக்கு, அரசியல், ஆட்சி முறைமைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,
இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துக்காக செய்யப்படவில்லை. இதனை யாரும் அரசியலாக பார்க்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால சந்ததிக்கு நமது வரலாற்றை கொண்டும் செல்லும் பணியாகவே நோக்கவேண்டும் என தெரிவித்தார்.
இன்று எமது மாவட்டத்தில் உள்ள சந்ததிக்கு எமது முன்னோர் பற்றியோ, எமது பண்பாடுகள் பற்றியோ, பாரம்பரியம் பற்றியோ தெரியாத நிலையே உள்ளது அவற்றினை அவர்களுக்கு ஊட்டுவதன் மூலம் எமது பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நான் நிலங்களும் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றின் பண்டைய வரலாறுகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் எமது பாரம்பரிய பிரதேசங்கள் பாதுகாக்கும் வகையில் அவற்றின் வரலாறுகளை ஆவணப்படுத்தவும் தனிப்பட்டவர்களிடம் உள்ள வரலாற்று ஆவணங்கள் பெறப்பட்டு அவற்றை அனைவரும் அறியும் வகையில் ஆவணப்படுத்த வேண்டும் எனவும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வரலாற்று பின்னணி கொண்ட பல பண்டைய கிராமங்களின் பெயர்கள் மாற்றமடைந்து அதன் உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு, மறைந்து வருகின்றன. அத்துடன் பண்டைய குடி வழி மரவுகளும் மறைந்து செல்கின்றன. இவை ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனவும் இங்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
நங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து தேடி தேடி படிக்கின்றோம். எமது சந்ததிக்கு சொல்கின்றோம். ஆனால் மட்டக்களப்பை பல குறுநில மன்னர்கள் ஆட்சிய செய்துள்ளார்கள். பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் ஆட்சிய செய்த அரண்மனைகள் புதைந்து கவனிப்பாரற்று கிடக்கின்றன. எமது சந்ததிகளுக்கு எமது பகுதியை ஆட்சிய செய்தவர்கள் குறித்து எதுவும் அறியாத நிலையே உள்ளது. இவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு என இருந்து முக்கூட்டுவர் சட்டம் நீக்கப்பட்டமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
எமது பண்பாடுகள், கலாசாரம் மற்றும் வரலாறுகள், தொன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை ஆவனப்படுத்தி ஏனையவர்கள் அறிந்துகொள்ளும் நிலைமையை ஏற்படுத்தவேண்டும் என இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை தளமாக கொண்டுசெயற்படும் வகையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்துறைக்காக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி,கிழக்கு பல்கலைக்கழகத்துக்காக விரிவுரையாளர் ஜெய்சங்கர், நவீன இலக்கியத்துக்காக செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், வரலாறுக்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவி பிரசாந்தினி, பாரம்பரிய இலக்கியத்துக்காக கோட்டக்கல்வி அதிகாரி பாலச்சந்திரன், தொழில்நுட்பத்துக்காக முகுந்தன்,அரசியல் ஆய்வுக்காக உதவி கல்விப்பணிப்பாளர் சிறிநேசன், பாரம்பரிய கைத்தொழிலுக்காக சாமித்தம்பி, கலைகலாசாரத்துக்காக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன், ஊடகத்துறைக்காக சுதந்திர ஊடகவியலாளர் வா.கிருஸ்ணகுமார், பாரம்பரிய சட்டத்துக்காக குருநாதன், முஸ்லிம் பாரம்பரியத்துக்காக கலாசார உத்தியோகத்தர் நியாஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் அவற்றினை இணையத்தளத்தில் தரவேற்றும் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ளவர்களையும் கல்விமான்களையும் இணைத்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


Geen opmerkingen:

Een reactie posten