தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

பிரித்தானிய ஆவண விருதுக்காக “இலங்கையின் கொலைக்களம்” பரிந்துரை

கனேடிய வெளியுறவு அமைச்சர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் செய்தியில் உண்மையில்லை!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:23.26 AM GMT ]
இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமர்வில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெய்ர்ட் பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் செய்தித்தாள்கள் கனேடிய வெளியுறவு அமைச்சர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
இலங்கையின் வெளியுறவு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸும்  கனேடிய வெளியுறவு அமைச்சர் மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் வெளியுறவு அமைச்சர் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று பெய்ர்ட்டின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னமும் கனடா திருப்தி கொள்ளவில்லை என்றும் பேச்சாளர் ரிக் ரொத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆவண விருதுக்காக “இலங்கையின் கொலைக்களம்” பரிந்துரை
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:59.38 AM GMT ]
பிரித்தானிய ஆவண விருதுக்காக சனல் 4 கெலம் மெக்ரேயின் இலங்கையின் கொலைக்களங்கள் “The Killing Fields Of Sri Lanka” பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
2013ம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் ஆவண விருதுகளுக்காக 8 ஆவணப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அதில், இலங்கையின் கொலைக்களங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக 41 வது பிரித்தானிய ஆவண விருதுக்குழு நேற்று அறிவித்துள்ளது.
சுமார் 12 தலைப்புக்களின் கீழ் இந்த ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் செனல் 4 வின் காஸ்மீர் டோச்சர் டெய்ல் (Kashmir’s Torture Trail )என்ற ஆவணப்படமும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர ஜோர்தான் சிரியா பிபிசியின் தெ சேம் ஒப் கத்தோலிக் சேர்ச் ( The Shame of the Catholic Church) என்ற படமும் பரிந்துரைக்கு உட்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten