தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 juli 2013

வகுப்பறையில் மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குத் தாக்கல்! வடமராட்சியில் சம்பவம்!

ஐதேகவின் தேர்தல் பிரசாரங்களுக்கு சஜித், கரு நியமிப்பு- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாப் போராட்ட எச்சரிக்கை!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:49.26 AM GMT ]
எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரங்களை ஒருங்கிணைக்கும் குழு ஒன்றை கட்சியின் தலைமை அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு பொறுப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கீழ் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவாமிநாதன் மற்றும் யோகராஜன் உட்பட்ட பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவில் இவர்கள் இருவரும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாப்போராட்ட எச்சரிக்கை
தமது விடுதலையை கோரி மீண்டும் சாகும் வரையிலான உண்ணா போராட்டத்தை நடத்தப் போவதாக கொழும்பின் மெகசீன் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
தமது விடுதலை தொடர்பில் பல அரசியல்வாதிகளும் உறுதிமொழிகளை அளித்தனர்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் உறுதிமொழிகளை வழங்கினார். எனினும் எதுவும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களமும் தமது விடுதலைக்கோரிய வழக்குகளை தாமதித்து வருவதாக அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே ஆகஸ்ட் 11ம் திகதியன்று தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
வகுப்பறையில் மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குத் தாக்கல்! வடமராட்சியில் சம்பவம்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 12:35.34 AM GMT ]
வகுப்பறையில் மாணவன் மீது தாக்குதல் நடாத்திய ஆசிரியர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி பிரதேசத்தில் உள்ள நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் மீதே ஆசிரியர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இவ் விடயம் குறித்து மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த ஆசிரியர் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
வழக்கு விசாரணையைத் தொடரும் தாக்குதலுக்குள்ளான மாணவன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Geen opmerkingen:

Een reactie posten