தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இலங்கை நிலைமை குறித்து பிரித்தானியாவின் மதிப்பீட்டை பிரதமர் டேவிட் கமரூன் கோருவார்!

வட்டுக்கோட்டை பொதுச்சந்தை விவகாரம்: வலி.பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 01:27.32 PM GMT ]
யாழ். வட்டுகோட்டை சிந்துபுரம் பொதுச்சந்தையின் பெயரை மாற்றி வட்டுக்கோட்டை பொது சந்தை என பெயர் மாற்றம் செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமையானது, நீதிமன்றத்தை அவமதித்த செயல் என குற்றம் சுமத்த முடியும் என்று உயர்நீதிமன்றம், வலிகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் உத்தரவு காரணமாக 2006 ம் ஆண்டு வட்டுக்கோட்டை பொதுச் சந்தையின் பெயர் சிந்துபுரம் பொதுச் சந்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அடுத்த 48 மணிநேரத்தில் சிந்துபுரம் என்ற பெயரை நீக்கி விட்டு, வட்டுக்கோட்டை பொதுச்சந்தை என பெயர் மாற்றம் செய்யாது போனால், வலிகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும் என உயர்நீதிமன்றம் இன்று எச்சரித்துள்ளது.
வட்டுக்கோட்டை பொதுச்சந்தையின் பெயரை சிந்துபுரம் பொதுச் சந்தை என பெயர் மாற்றியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, பிரதேச மக்கள் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை நிலைமை குறித்து பிரித்தானியாவின் மதிப்பீட்டை பிரதமர் டேவிட் கமரூன் கோருவார்!
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 01:33.22 PM GMT ]
இலங்கை நிலைமை தொடர்பில் பிரித்தானியாவின் சொந்த நிலைவர மதிப்பீட்டை அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டுத்துறை சிரேஸ்ட அமைச்சர் பார்னோஸ் சவீதா வர்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கான பொதுநலவாய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றதா? என்பதை அறிவதற்காகவே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது என்று வர்சி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போருக்கு பின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் குறைந்தே உள்ளன.
பொதுநலவாய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் நாடுகள் தொடர்பான பிந்திய தகவலிலும் இலங்கையின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மேம்பாடுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு முன்னர் நல்லிணக்கம் மனித உரிமைகள் மற்றும் வடமாகாண தேர்தல் என்பவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என்பதையே பிரித்தானியா விரும்புவதாக வர்சி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten