தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

கிளிநொச்சியில் வர்த்தகர் மீது அசிட் வீச்சு தாக்குதல்

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு போலி நாணயத்தாள்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 02:40.01 AM GMT ]
போலி நாணயத்தாள்கள் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் கடத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய நாணத்தாள்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் போலியாக அச்சிடப்பட்ட இந்திய ரூபாய்கள் இலங்கையில் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்ட 500 ரூபா இந்திய நோட்டுக்களை இலங்கை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பாகிஸ்தானியர் ஒருவருடமிருந்து 40 போலி 500 நோட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத்த் தடுப்புப் பிரிவினர் இந்திய போலி நாணயத்தாள் விநியோகம் தெடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக ஓரு மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
போலி நாணயத்தாள்களை பாகிஸ்தானியர் ஒருவரே விநியோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் றோ உளவுப் பிரிவினரும் இந்த போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒருகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் போலி நாணயத்தாள்களை மாற்றிய போது பொலிஸார் குறித்தந பரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் வர்த்தகர் மீது அசிட் வீச்சு தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 04:00.22 AM GMT ]
கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி திவாகரன் என்ற வர்த்தகரே அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து  குறித்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten