தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

இலங்கையில் முதலிட பிரித்தானியர்கள் அச்சம்

அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம்: நான்கு இந்தோனேசியர்கள் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:42.10 PM GMT ]
இந்தோனேசியாவின் ஜாவா பிரதேசத்தின் தென்மேற்கு கடற்பகுதியில் கடந்த வாரம் மூழ்கிய படக்கில் இருந்த புகலிட கோரிக்கையாளர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனை இந்தோனேசிய தேசிய பொலிஸ் பேச்சாளர் பிரிகேடியர் ரொனி சொம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.
200 பேரை ஏற்றிய படகு ஜாவாவுக்கு அருகில் உள்ள ஆழ்கடல் பகுதி மூழ்கியது. இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் புகலிட கோரிக்கையாளர்களுக்கு படகை பெற்று கொடுக்க உதவியுள்ளனர். இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரொனி சொம்பி தெரிவித்தார்.
படகை ஓட்டிச் சென்ற மாலுமி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த படகில் இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த புகலிட கோரிக்ககையாளர்கள் பயணம் செய்திருந்தனர்.

இலங்கையில் முதலிட பிரித்தானியர்கள் அச்சம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:26.47 PM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, இலாப மீட்டாத நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்றல் மற்றும் காணி உரிமையாளர் சட்டம் என்பன காரணமாக இலங்கையில் முதலீடு செய்துள்ள பிரித்தானியர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் ரோபி புளொக்( Robbie Buloch) இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவே பிரித்தானியர்கள் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட தயங்குகின்றமைக்கான காரணம் என்று உதவி உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில இணைத்தளம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர் சிறிய வர்த்தக முயற்சிகளையே பிரித்தானியர்கள் இலங்கையில் மேற்கொண்டுள்ளனர். எனினும் நீதி அமைப்பில் உள்ள பிரச்சினைகளால் பாரிய தொழில்துறை வர்த்தகர்கள் இலங்கைக்கு வருவதில் அச்சத்தை கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கைக்கு வந்து பல முன்னேற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவர்களை இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் சந்திக்காமை வருத்தம் மிக்க விடயம் என்று பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten