[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:44.18 PM GMT ]
29 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பரவலாக போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்திச் செல்லும் பெரும்புள்ளிகள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா கூறுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
ஐக்கிய இலங்கை மஹா சபை மன்னார் மாவட்டத்திலும் ஜனசெத பெரமுன குருணாகல் மாவட்டத்திலும் இன்று வேட்புனுமக்களை தாக்கல் செய்தன.
அதேவேளை இரண்டு பிரதான கட்சிகள் இந்த வாரத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இன்று வேட்புமனுக்களில் கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
ஜே.வி.பி எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பெரும்புள்ளிகளுக்கு எதிராக செயற்படப் போவதாக பொதுபல சேனா சூளுரை!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 03:36.30 PM GMT ]
பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் பிரிவினை வாதம் தொடர்பாக பேசும் போது சிலருக்கு வருத்தமாக இருக்கின்றது.
அப்படியான ஒருவர் கொலன்னாவை பகுதியிலும் இருக்கின்றார்.
அவர்தான் ரேனுக பெரேரா. கொலன்னாவ போன்ற பகுதியில் இப்படியான அரவாணிகள் பிறப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
13 வது அரசியலமைப்பு திருத்தில் உள்ள பாதகங்களை நாங்கள் எடுத்துக் கூறினோம்.
பொதுபல சேனா என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு என்று ரேனுக பெரேரா மாத்திரம் கூறுகிறார்.
அதேபோன்று இந்த பகுதியில் இருக்கின்ற பெண் அரசியல்வாதி அசோகா லங்காதிலக்க கூறுகிறார், பௌத்த பிக்குவே!! விகாரைக்கு சென்று என்னவென்றாலும் செய்து கொள்ளுங்கள் என்று.
இதுதவிர, பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரர், நாட்டில் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.
யுத்தத்தை பார்க்கிலும் பாரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கை மக்கள் நாளுக்கு நாள் அழிந்து போவதை தவிர்க்க முடியாது.
எனவே, அதில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten