தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

வவு. புளியங்குளம் வாகன விபத்தில் இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

யாழ். மாதகல் பிரதேச இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் மனித புதைகுழி!
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:21.47 AM GMT ]
இலங்கைச் சிங்கள இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்ட போது மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும், அண்மையிலும் இதே போன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டையோடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவு. புளியங்குளம் வாகன விபத்தில் இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:55.57 AM GMT ]
வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புளியங்குளம் பிரதேச பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜமால் அவர்கள், மரணமடைந்தவர் சுமார் 50 வயதுகள் மதிக்கத்தக்கவர் என்றும் இவர் 5 அடி 8 அங்குலம் உயரமுடையவர் என்றும் தெரிவித்தார்.
இவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten