தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

வெங்காயத்திருடர்கள் அளவெட்டியில் அட்டகாசம்: விவசாயிகள் கவலை- குளவித் தாக்குதலுக்கு இலக்கான 10 பேர் வைத்தியசாலையில்!


வயதான கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 06:19.56 AM GMT ]
சிறை தண்டனை பெற்று சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தருவாயில் இருக்கும் வயதான கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஆராய்ந்து பார்க்கும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சிறைச்சாலை திணைக்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு, 10 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்த 60 வயதுக்கும் மேலான கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட வயது முதிந்தவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்ந்து அது பற்றிய ஆவணங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரட்ன பல்லேகம ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஆவணங்களை தயார்ப்படுத்தும் பணிகளை தற்போது நடந்து வருவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் காமினி ஜயசிங்க தெரிவித்தார்.
50 வயதை கடந்த கைதிகள் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இந்த கைதிகளில் உடல் நிலை பலவீனமான கைதிகளை விடுதலை செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெங்காயத்திருடர்கள் அளவெட்டியில் அட்டகாசம்: விவசாயிகள் கவலை- குளவித் தாக்குதலுக்கு இலக்கான 10 பேர் வைத்தியசாலையில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 06:34.57 AM GMT ]
அளவெட்டி வடக்குப் பகுதியிலுள்ள தோட்ட வெளிகளில் இரவு வேளைகளில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிய வெங்காயத்திற்கு நல்ல கிராக்கி காணப்படும் இக் காலப்பகுதியில் சிறிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வெயிலில் உலரவிடப்பட்டுள்ள நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டுகின்றனர் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கூட வெங்காயத்தைத் திருடியவேளையில் விவசாயிகளைக் கண்டு திருடர்கள் ஓடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதனால் இரவு வேளைகளில் விவசாயிகள் தோட்ட வெளிகளில் காவலுக்கு இருக்கவேண்டிய நிலை காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையில் குளவி தாக்குதலுக்கு உள்ளான 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மாத்தனை பகுதியில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தனை பகுதியில் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் மீதே குளவிகள் தாக்கியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
55 வயதான சின்னத்தம்பி செல்வேந்திரா, 37 வயதான கந்தசாமி கமல்ராஜ், 44 வயதான செல்வராசா கமலக்கண்ணன், 28 வயதான சங்கரப்பிள்ளை சசிகரன் ஆகியோரே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten