தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

ஒருவாரத்தில் நான்கு சிறுமிகள் துஸ்பிரயோகம்! யாழ்ப்பாணத்தில் தொடரும் அவலநிலை!

வேட்புமனு தொடர்பான பேச்சுவார்த்தையில் மகேஸ்வரனின் குடும்பப் பிரச்சினை பற்றி பேசிய ரணில்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:30.48 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு குழு, யாழ்ப்பாணத்திற்கான வேட்புமனுவை தயாரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரனின் குடும்ப பிரச்சினை பற்றியும் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மகேஸ்வரனின் இரண்டு சகோதர்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரியிருந்ததே இதற்கு காரணம். இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,
மகேஸ்வரனின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுமாயின் இரண்டு பேருக்கும் வேட்புமனுக்கள் கொடுக்கப்பட மாட்டாது. நான் விஜயகலா மகேஸ்வரனிடம் பேசுகிறேன் என்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் வடக்கில் உள்ள 05 மாவட்டங்களிலும் போட்டியிடுவது என ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்தது.
ஒருவாரத்தில் நான்கு சிறுமிகள் துஸ்பிரயோகம்! யாழ்ப்பாணத்தில் தொடரும் அவலநிலை
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 10:50.54 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் இருந்து தெரியவருகிறது.
கோப்பாய், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுமியர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக 3 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உரும்பிராய் கிழக்குப் பகுதியில் உள்ள 15 வயதுச் சிறுமி அதே இடத்தினைச் சேர்ந்த 25 வயது இளைஞரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக் கடந்த 18 ம் திகதி வியாழக்கிமை கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் காங்கேசன்துறைப் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த வைகாசியில் இருந்து ஆடி மாதத்திற்கு இடைப்பாட்ட காலப்பகுதியில் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் 36 வயதுடைய ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி கே.கே.எஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய கந்தர்மடம் பகுதுpயைச் சேர்ந்த ஆசிரியரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
மேலும் கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை அச்சுவேலி - ஆவரங்கால் பகுதியில் உள்ள 8 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆவரங்கால் மேற்கு புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten