[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:14.04 PM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றிய தயாசிறியை விட, 22 வயதையும் பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனான ஜொஹான் பெர்னாண்டோ அதிகளவில் விருப்பு வாக்குகளை பெற்றால், தயாசிறியின் அரசியல் தலையெழுத்து எப்படி அமையும்?
தயாசிறி ஜயசேகர என்ற பாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே உருவாகியது.
விமல் வீரவன்ஸ ஜே.வி.பியில் இருந்த போது காணப்பட்ட வலிமை, அரசாங்கத்தில் இருக்கும் போது இல்லை.
அன்று மக்களிடம் இருந்த வரவேற்பு இன்று அவருக்கு இல்லை.
இதுபோலவே தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது கிடைத்த மக்களின் வரவேற்பு அரசாங்கத்திற்கு சென்ற பின்னர் கிடைக்காது.
அதனைத்தான் அவர் பாரதூரமான அரசியல் தவறை செய்து விட்டார் என்று நான் கூறுகிறேன் என்றார்.
இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை யாழ். விஜயம்! திங்கள் வேட்புமனு தாக்கல் செய்வர்!
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:27.42 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து உரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
அதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும், மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten