தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

கருத்தரங்கில் குழப்பம் விளைவித்து அதனைக் குழப்பிய தேரர் !




மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி தொடர்பான கருத்தரங்கில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. தேசிய சமாதானப்பபேரவையின் எற்பாட்டில் கற்றறிந்த பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றை சட்ட ரீதியாக தீக்ப்பதற்கான வழிமுறைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசங்களை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள பிரமுகர்கள் தேசிய சமாதானப்பேரவையின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரோவும் மற்றும் அவருடன் அங்கு கூட சென்ற சிலரும் தாங்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து அவர்களும் அதில் பங்கேற்றனர். இதையடுத்து இந்த இங்கு தானும் உரையாற்ற வேண்டுமென மட்டக்களப்பு மங்களராமய விகாதராதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து அவரும் அதில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது. இவர் கருத்து தெரிவித்த போண்து அங்கு குழப்பம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து கூட்டம் இடை நிறுத்தப்பட்டு பங்கு பற்றுனர்கள் சிலர் மண்டபத்துக்கு வெளியேயும் சிலர் உள்ளேயும் இரந்த நிலையில் மண்டபம் மூடப்பட்டது.

தேரோ மற்றும் கூட்ட நடாத்துனர்கள் வெளியே காணப்பட்டனர். இதன் போது அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி அஜித் பிரசன்னா மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையிலான பொலிசார் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தினர். இதன் போது இந்த கூட்டத்துக்கு எந்தவித அழைப்புமின்றி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரிகளையும் பங்கு பற்றுனர்களையும் தாக்கியதாகவும் மிக கடுமையாக பேசியதாகவும் அச்சுறுத்தியதாகவும் செயலமர்வு ஏற்பாட்டாளர்களான தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை தனக்கு இந்த கூட்டத்துக்கு அழைப்பு வந்ததாகவும் அழைப்பின் பேரிலேயே தான் வந்ததாகவும் இதன் போது தன்னை தாக்கியதாகவும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்திணதோரோ தெரிவித்தார். இது தொடர்பான இவர்களின் வாக்கு மூலங்களை பொலிசார் பதிவு செய்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா நிலைமையினை நேரடியாக விசாரித்ததுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடயங்களை கேட்டு அறிந்து கொண்டார். இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten