[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:51.43 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியை விட்டு விலகிச்செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்சியின் உள்ளகத் தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று அவர் சேகுதாவூத் வலியுறுத்தி வந்தார்.
இலங்கை விஜயத்தின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அது தொடர்பில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை செவிமடுக்காத கட்சியின் தலைமை, மாகாணசபைத் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 5ம் திகதியன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி நிலைமைகளை ஆராயவுள்ளது.
இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 12:56.49 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு செப்டம்பர் 9 முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதியன்று இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் 31ம் திகதியன்று கொழும்பில் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்புடன் தமது விஜயத்தை முடித்துக்கொள்வார்.
இதன்போது அவர் போருக்கு பின் இலங்கையில் இடம்பெற்று வரும் முன்னேற்றங்களை அவதானிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten