தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

போரில் பொதுமக்கள் பாதிப்புறாமலேயே விமானப்படை செயல்பட்டது!- விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக

நீதிமன்ற பிணை நிபந்தனைகளின் போது அரசியல் சார்பு!– சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு! சட்டத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்!- பிரதம நீதியரசர்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:49.20 AM GMT ]
இலங்கையில் நீதிமன்ற பிணை வழங்கப்படும் போது விதிக்கப்படும் நிபந்தனைகளில் அரசியல் செல்வாக்கு உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
பிணை வழங்கலின் போது அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சலுகை அடிப்படையிலும் சாதாரண மக்களுக்கு கடுமையான முறையிலும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் நேற்று இடம்பெற்ற போது அதில் உரையாற்றிய ஜெயசுந்தர, இதன் காரணமாக அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மேற்கொள்ளும் குற்றச் செயல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணை நிபந்தனையை மீறி சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக அவருக்கு விளக்கமறியல் தண்டனையை வழங்கியமைக்காக புத்தளம் நீதிவானுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றும் சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - பிரதம நீதியரசர் 
சட்டத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தன்னாலியன்ற முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உறுதியளித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் பொறுப்பேற்பதற்கு முன்னர் சட்ட துறையில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் கூறினார்.
எந்த ஒரு வழக்கையும் ஒரு வருடத்துக்குள் நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குகளை நீண்டகாலத்துக்கு கொண்டு செல்லாமல், ஒரே வருடத்திற்குள் விசாரணை செய்து நிறைவுறுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இவ்வாறான திட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைகளில் எந்த குறைகளும் ஏற்படும் என்று கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போரில் பொதுமக்கள் பாதிப்புறாமலேயே விமானப்படை செயல்பட்டது!- விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 01:13.38 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நான் எந்தவொரு சாதாரண பிரஜைக்கும் தீங்கிழைக்கவில்லை என்றும், விமானப்படையின் பீரங்கிகள் பொது மக்களுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டோம் என்றும் முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்
முன்னாள் விமானப் படைத் தளபதியும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக முன்னாள் விமானப்படைத் தளபதி எயா மார்ஷல் குணதிலகவின் மூத்த மகனாவார்.
திருமணமான இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
இவரது இளைய சகோதரரும் விமானப் படையில் உயர் பதவி வகித்த விமான ஓட்டியாக இருந்தார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இவர் ஓட்டிச் சென்ற விமானம் செல் தாக்குதலுக்கு இலக்காகி புத்தளத்தை அடுத்துள்ள கடல் பிரதேசத்தில் வீழ்ந்து நொறுங்கியது.
சன்டே ஒப்சேவருக்கு எயா சீவ் மார்சல் ரொஷான் குணதிலக அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தையைப் போல் ஒரு விமான ஓட்டியாக வரவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தேன்.
நான் விமானப் படையின் தளபதியாக இருந்த போது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எமது முப்படைவீரர்களால் துவம்சம் செய்ய முடிந்தமை குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வலுவான தலைமைத்துவத்தின் மூலமே இலங்கை விமானப் படைக்கு புலிப் பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்க முடிந்தது.
யுத்தத்தில் பயங்கரவாதிகளை அடிபணிய வைப்பதற்கு எங்களுக்கு ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்பு செயலாளரும் அளித்த ஆதரவையும் வழிகாட்டல்களையும் நாம் என்று மறக்க முடியாது.
யுத்தத்தின் போது விமானப்படையின் பீரங்கிகள் பொது மக்களுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டோம், இந்த யுத்தத்தின் போது நான் எந்தவொரு சாதாரண பிரஜைக்கும் தீங்கிழைக்கவில்லை.
ஓய்வு நேரத்தில் நான் சிங்கள மற்றும் ஆங்கிலப் பாடல்களைக் கேட்பேன், மற்றும் அவகாசம் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பைபிளை படிக்க தவறவும் மாட்டேன். இவ்வாறு எயா சீவ் மார்சல் ரொஷான் குணதிலக தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten