தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

காணாமல் போனோர் தொடர்பில் ஆணைக்குழுவை நியமிக்கும் அரசின் யோசனை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது!- மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள்

அமைச்சர் ஹக்கீமை கடுமையாக சாடியுள்ளார் மஹியங்கனை விகாராதிபதி
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:11.17 PM GMT ]
மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாக மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரக்கித்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சரவை கடுமையாக சாடியுள்ளார்.
பொறுப்புமிக்க அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஹக்கீம் உண்மையான ஆதாரங்களை வழங்கி, குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.
அமைச்சர் தனது அறியாமை காரணமாக பொய்யான அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருவதால் அவரை மன்னிக்க முடியாது.  மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் இப்படியான அமைச்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை மஹியங்கனை பிரதேசத்தில் ஜூம்மா என்ற பெயரில் பள்ளிவாசல்கள் எதுவும் இருக்கவில்லை.
பள்ளிவாசலை அமைக்க மாவட்ட செயலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபை, நகர அபிவிருத்தி அதிகாரச் சபை உட்பட பல நிறுவனங்களிடம் அனுமதி பெறவேண்டும்.
இதனடிப்படையில் இந்த நிறுவனங்களிடம் விசாரித்த போது, அவர்கள் பள்ளிவாசல் தொடர்பான எந்த தகவல்களையும் வழங்கவில்லை என தம்மரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் ஆணைக்குழுவை நியமிக்கும் அரசின் யோசனை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது!- மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:38.48 PM GMT ]
போர் நடைபெற்ற 30 வருடகாலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க எடுத்துள்ள முடிவானது பாரதூரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்களான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் பற்றி அறிய விரிவான விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான ஆணைக்குழுக்கள் மூலம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என காணாமல் போனவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவரும், ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் செயலாளருமான சந்திரபால குமாரகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள் குறித்து கண்டறிய கடந்த காலங்களிலும் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. எனினும் அவற்றினால் எந்த பயனும் ஏற்படவில்லை.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten