தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

கிளிநொச்சி அறிவகத்தில் இரா. சம்பந்தன், சீ.வி. விக்னேஸ்வரன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் பலர் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விதிமுறைகள் பற்றி கலந்துரையாடல்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! பொலிஸ் அதிகாரி பலி: மட்டக்களப்பில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 10:20.06 AM GMT ]
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தாமல் பிள்ளையாரடிப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி அறிவகத்தில் இரா. சம்பந்தன், சீ.வி. விக்னேஸ்வரன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் பலர் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விதிமுறைகள் பற்றி கலந்துரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 10:05.11 AM GMT ]
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்ப்பாணத்தின் முதன்மை வேட்பாளரும் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம். ஏ. சுமந்திரன், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் த. குருகுலராஜா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten