தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் போராட்டம்

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று வழக்கு தாக்கல்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 06:25.11 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில், கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டி முன்னிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.

2010 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி கொழும்பு கறுவாத்தோட்டம் தர்மபால மாவத்தையில் உள்ள தேசிய அபிவிருத்தி வங்கியில் இருந்த மூன்று வங்கி கணக்குகள் தொடர்பிலான உரிமை மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில், மூன்று வங்கி கணக்குகளுக்கும் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானித்த நீதவான் பிலப்பிட்டிய செப்டம்பர் 07 ஆம் திகதி முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் போராட்டம்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 06:40.01 AM GMT ]
இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அமைப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் சத்தியாகிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்திப்பில் இருந்து காலி முகத்திடல் பிரதேசம் வரை கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவி்த்தனர்.
இதனையடுத்து காலி முகத்திடலில் இருந்த கொள்ளுப்பிட்டி சுற்று வட்டம் வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை உடன்படிக்கை கையெடுத்திட்டு, இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, இந்திய - இலங்கை உடன்படிக்கையை எதிர்க்கும் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள பிரிவினைவாத அதிகாரங்களை நீக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten