தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அழிக்கப்படுவர்: நாடாளுமன்றில் சாபமிட்ட ஹுனைஸ் பாருக் எம்.பி

பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தனர்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 09:06.02 AM GMT ]
பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை சபாநாயகர் ஷமல் ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் தலைமை பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது.
சபாநாயகருடன் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் மிகவும் தெளிவாகப் பேசினர்.
இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மக்களின் உரிமைகளை பாதுகாத்து முன்னெடுத்து செல்லும் பணிகள் தொடர்பில் அவர்கள் திருப்தியுடன் கருத்து வெளியிட்டனர் என்றார்.
பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தனர்
இலங்கை சென்றுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்த பேச்சுவார்ததை நேற்றிரவு நடந்துள்ளது.
பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் அமைச்சரும், பிரித்தானிய பிரதிநிதிகளும் கவனம் செலுத்தினர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் பீரிஸ், பிரித்தானிய பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனை தவிர கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது சம்பந்தமாகவும் அமைச்சர் இதன் போது விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி ஆகியவற்றின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இலங்கை சென்றனர். அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சியின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுகளை நடத்தியிருந்தனர்.
அத்துடன் கடந்த புதன் கிழமை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்தனர்.
சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை சர்வதேச தளமாக பயன்படுத்த வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் யோசனை
சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை சர்வதேசம் ஒரு தளமாக பயன்படுத்த வேண்டும் என தான் யோசனை முன்வத்தாக இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நெதர்லாந்து சென்றிருந்த பீரிஸ், ஹேக் நகரில் உள்ள நிரந்த சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் செயலாளர் யூகோ சீபெல்சை சந்தித்த போதே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தம் தொடர்பில் இலங்கை சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த துறையில் நிபுணத்துவம், உட்கட்டமைப்பு போன்றவற்றை செயற்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.
சர்வதேச நடுவர் நீதிமன்றம் வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளில் இருந்து வரும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் முன்னணியில் இருந்து செயற்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றம் 1899ம் ஆண்டு நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஸதாபிக்கப்பட்டது.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அழிக்கப்படுவர்: நாடாளுமன்றில் சாபமிட்ட ஹுனைஸ் பாருக் எம்.பி
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 09:03.04 AM GMT ]
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி  அவர்களின் வழிப்பாட்டு தலங்களான பள்ளிவாசல்களை தாக்கி அழிக்கின்ற இனவாதிகளும் அவர்களின் பின்னால் இருந்து செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளும் அல்லாஹ்வினால் அழிக்கப்படுவர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்ககையில்,
இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கத்தவர்களும் இவ்வாறே அழிக்கப்படுவார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் சாபமிட்டுக் கூறுகிறேன்.
தீவிரவாதிகளும் இனவாதிகளும் இணைந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
முஸ்லிம்கள் மீது அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரச தரப்பு அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
மாகாண அமைச்சர் ஒருவர் தான் மஹியங்கனைப் பள்ளிவாசல் மூடப்படுவதற்கு காரணமாகவும் இருந்தார்.
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்படுகின்ற போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
பள்ளிவாசல் மீதும் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்துவோர் அவர்களின் பின்னணியில் இருந்து செயற்படும் அரசியல்வாதிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதோர் மற்றும் இத்தகைய இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதோர் என சகலரும் அல்லாஹ்வினால் அழிக்கப்படுவார்கள்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பவன் என்ற ரீதியில் நான் கூறியமை நடந்தே தீரும் என்று இந்த சபையில் சாபமிட்டுக் கூறுகிறேன். ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு திறக்கும் போதும் ஐவேளை தொழுகையின் போதும் இதற்காக பிரார்த்திக்குமாறு கேட்கிறேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten