தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு! வடக்கில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுமா? இரா.சம்பந்தன்

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம் இணைப்பு
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 08:26.22 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இன்று பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்  யாழ். கச்சேரிக்கு சென்று  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
மக்களுடைய ஒத்துழைப்பின் மூலமே 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்: சீ.வி.விக்னேஸ்வரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை தேர்தல் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் யாழ்.தேர்தல் திணைக்களத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கின்றது.
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன், கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், உள்ளிட்ட குழுவினர் மேற்படி வேட்பு மனுத்தாக்கலை நண்பகல் 12.மணிக்கு செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு பேசிய முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஷ்வரன்,
புதிய பயணத்தை ஆரம்பித்து விட்டோம் 25வருடங்கள் வடக்கில் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த தருணத்தில் மக்களுடைய ஒத்துழைப்வே அவசியமாகின்றது. அதன் மூலமே 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். ஒற்றுமையாகவும், ஒத்துழைப்புட னும் உங்கள் ஆதரவு தளத்தை ஏற்படுத்தவேண்டும்.
நீண்டகாலம் தமிழ் மக்களால் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்டி வளர்க்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி பெறும், அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
வேட்பாளர் விவரம்,
யாழ். மாவட்டம்
சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம்
பாஷையூரைச் சேர்ந்த இ.ஆனல்ட்
சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ச.சயந்தன்
வடமராட்சியைச் சேர்ந்த பொறியிலாளர் சிவயோகன்
யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்
யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி
யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் மனைவி ஆனந்தி
தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்
காரைநகரைச் சேர்ந்த தம்பிராசா
கரவெட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்
வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரன்
சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன்
வடமராட்சியைச் சேர்ந்த ச.சுகிர்தன்
வவுனியா மாவட்டம்
எம்.எம்.ரதன்
செந்தில்நாதன் மயூரன்
எஸ்.தியாகராஜா எம்.பி.நடராஜா எஸ்.ரவி
ஜி.ரி.லிங்கநாதன்
க.சந்திரகுலசிங்கம்
ஆர்.இந்திரராஜா
வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்
மன்னார் மாவட்டம்
அந்தோணி சூசைரட்ணம் சிறிமோ சாய்வா சு.சிவகரன்
ஞானசீலன் குணசீலன்
இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்
திரிசோத்திரம் நிமலசேகரம்
ஜோசப் ஆனந்த குரூஸ்
பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
அய்யும் அஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டம்
ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்
க.சிவநேசன் (பவான்)
ஜு.கனகசுந்தரசுவாமி
வைத்தியர் சிவமோகன், கமலேஸ்வரன்
திருமதி குணசீலன் மேரிகமலா
உடையார்கட்டைச் சேர்ந்த ஆண்டிஐயா புவனேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டம்
வீ.ஆனந்த சங்கரி,
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,
பசுபதி அரியரத்தினம்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,
திருலோகமூர்த்தி,
பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,
திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு! வடக்கில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுமா? இரா.சம்பந்தன்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 01:21.55 PM GMT ]
சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலேயே வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படுகின்றது. எனவே சர்வதேசம் தேர்தலை நடத்துவதற்கும் மேலாக தேர்தல் நீதியான முறையில் நடைபெறவும் சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 
கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
இவ்வாண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடரில் புரட்டாதி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்பது கூறப்பட்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது நியமப் பத்திரங்கள் பெறப்படுகின்றது.
தேர்தல் நடைபெறும் என நாம் கூட்டமைப்பு நம்புகின்றது. வடக்கு மாகாணத்தில் 25வருடங்களின் பின்னர் தேர்தல் நடத்தப்படுகின்றது.
எனவே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை சுதந்திரமான முறையில் தெரிவு செய்வதற்கு, அவர்களுக்குள்ள ஜனநாயக உரித்தை பயன்படுத்துவதற்கு யாரும் தடைவிதிக்க கூடாது.
முன்னர் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களின்போதும், பாராளுமன்ற தேர்தல்களின் போதும் பல அச்சுறுத்தல்களும், ஜனநாயக மறுப்புக்களும், மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கின்றது.
எனவே இங்கு சுதந்திரமான பொதுச்சேவை, காவல்துறை, தேர்தல் ஆணையகம் இல்லை.
அவற்றை ஏற்படுத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த 13ம் சரத்தின் அதிகாரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் நடைபெறப் போகும் தேர்தல் நீதியான முறையில், சுதந்திரமாக நடக்குமா என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அவநம்பிக்கையுடனேயே இருக்கின்றது.
எனவே மக்களுக்கு, எங்கள் அரசியல் நிலைப்பாடுகளை மிக விரைவில் நாங்கள் கூறுவோம். அதற்கு மக்கள் உரிய அங்கீகாரம் அளிப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிடுகையில்,
மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மக்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டைகளும், பறிக்கப்பட்டும், குண்டுகள் வெடிக்கப்பட்டும் நடந்த சம்பவங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
இந்ந நிலையில் மக்களுடைய தீர்ப்பே இறுதியானதும், பெறுமதியானதும் கூட.
இதுவரை காலமும் ஒரு ஆயுதக் குழுவின் கீழ் அவர்களது ஆயுதங்களின் அதிகாரத்தின் கீழ் ஆட்சி வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசும், அதற்கு ஆதரவான சில நாடுகளும் கூறிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் மக்கள் ஏகோபித்த ஆதரவினை வழங்கவேண்டும்.
அந்த ஆதரவிற்கு. அந்த ஆணைக்கு சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் நிச்சயமாக பதில் சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு (மேலதிக இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று நண்பகல் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடலும் அங்கு இடம்பெற்று வருகின்றது. . 

Geen opmerkingen:

Een reactie posten