தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகளால் இன ஐக்கியத்திற்கு தடை: மன்னார் ஆயர்

இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்தாவிட்டால் 20 வருடங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும்!- உலக சுகாதார அமைப்பு
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:44.46 PM GMT ]
புகைத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனல், அடுத்த 20 வருடங்களில், புகைத்தல் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புகைத்தல் காரணமாக இலங்கை வருடாந்தம் 20 ஆயிரம் பேர் மரணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கும் நோக்கில், உலக சுகாதார அமைப்பின் இரண்டு விசேட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
சிகரட்டுகளை பொதி செய்யும் பெட்டிகளில் 80 வீதமான பகுதிகள் உள்ளடங்கும் வகையில் புற்றுநோய் தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகளால் இன ஐக்கியத்திற்கு தடை: மன்னார் ஆயர்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 11:33.24 AM GMT ]
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தி வருவதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் சிலர் ஆயரை சந்திக்க வவுனியா சென்றிருந்த போது ஆயர் இதனை கூறியுள்ளார்.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் சகல அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமின்றி, வேலைவாய்ப்புகள் என்பனவும் அமைச்சரின் தேவைக்கு அமைய நடைபெறுவது அநீதியானது என சுட்டிக்காட்டி ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனையடுத்தே ஜனாதிபதி தனது விசேட பிரதிநிதிகளை அங்கு அனுப்பிவைத்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது பெரும் சிரமமாக மாறியுள்ளது என்று ஜனாதிபதியின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஆயர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
அமைச்சரின் செயற்பாடுகள் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் பிரதேசங்களில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இடையிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்க காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள ஆயர், இந்த விடயம் தொடர்பில் உடனடியான விசாரணை ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten