புலிகள் தளபதி எழிலன் மனைவியும் போட்டி !
29 July, 2013 by admin
இதில் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர். 36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 03 பெண்களும் உள்ளடங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை தொடக்கம் சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டார் தயா மாஸ்டர் !
29 July, 2013 by admin
புலிகள் இயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்துவிட்டு பின்னர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் இலங்கை அரசோடு இணைந்த தயா மாஸ்டர், இலங்கை இராணுவத்தால் தேசியதலைவர் உடல் என்று ஒன்றைக் காண்பிக்க , அதனை தலைவர் தான் என்று தாம் உறுதிசெய்வதாக இவர் தெரிவித்தார்.(இது மக்களுக்கு நினைவிருக்கும்) இதனால் தமிழர்களுக்கு மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்தார் இவர். இனியும் இவரை நிறுத்தினால், தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று சிலர் யாழ் சுதந்திரக் கட்சி அலுவலகத்துக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அவர்களும் இச் செய்தியை மேலிடத்திற்கு அனுப்ப, தயா மாஸ்டரைக் காய் வெட்டினார் மகிந்தர். இதுவே நடந்து முடிந்துள்ளது. இதனால் படு ஆத்திரம் அடைந்த தயா மாஸ்டர், என்ன செய்யலாம் என்று தனக்கு நெருக்கமானவர்களோடு ஆலோசனை ஒன்றை நேற்றைய தினம் நடத்தியுள்ளார். இதில் கலந்துகொண்டவர்கள் அவரை சுயேட்சையாகப் போட்டியிடுமாறு அறிவுரை கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து தான் சுயேட்சையாகப் போட்டியிடலாமா என்று தயா மாஸ்டர் யோசித்துக்கொண்டு இருந்தவேளை, அதிலும் மண் விழுந்துள்ளது. இன்றுகாலை(திங்கட்கிழமை) அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவ்வாறு செய்யவேண்டாம் என்று முக்கிய புள்ளி ஒருவர், கொழும்பில் இருந்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுயேட்சையாகப் போட்டியிடும் கனவும் கானல் நீராய் போனது. மொத்தத்தில் சனிக்கிழமை அன்று சனி பகவான், தயா மாஸ்டரை பீடித்து விட்டார் போல இருக்கு. இது ஜென்மத்து சனியா இல்லை ஏழரை நாட்டு சனியா என்று தான் தெரியவில்லை.
கார் பார்க்கில் காத்திருந்து கத்தியால் குத்தினார்கள் !
29 July, 2013 by admin
இன்று இலங்கை நேரப்படி மதியம், கொழும்பில் உள்ள பிரபல ஷாப்பிங் சென்ரர் (ஓடல்) ஒன்றுக்கு மாலக சில்வா சென்றுள்ளார். அவர் வெளியே வந்து தனது காரை எடுக்க முற்பட்டவேளை அவருக்கும் சில இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இத் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதேவேளை சிலர் கைகலப்பில் ஈடுபட ... அங்கே நின்றிருந்த பிறிதொரு கோஷ்டி அவர் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்கள். மேலும் சிலர் கத்தியால் பல தடவை குத்தியுள்ளார்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாகப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
ஓடல் ஷாப்பிங் சென்ரரை சுற்றிவளைத்துள்ள பொலிசார் அங்கே தடயங்களை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். நூற்றுக்கணக்கான பொலிசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஊடகவியலாளர்கள் எவரையும் அங்கே அனுமதிக்கவில்லை எனவும் கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten