தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

மீனவர்களின் பிரச்சினைக்கு இந்திய தீர்வை ஏற்கமுடியாது: வடமாகாண கடற்றொழிலாளர்!


மீனவர் பிரச்சினைக்கு இந்தியாவால் திணிக்கப்படும் தீர்வெதுவும் வேண்டாம், மாறாக இரு நாடுகளுக்குமான சமத்துவமான தீர்வே வேண்டுமென வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் சூரியகுமார் தெரிவித்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வருகைதரும் இந்திய மீனவர்களுடன் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட பிரதிநிதிகள் பங்குபற்றுவதுடன், கலந்துரையாடலில் எட்டப்படடும் தீர்வு அரசியல் சார்ந்தாக அமையாமல் சுதந்திரமானதாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து வடக்கு, கிழக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பினை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தில் நடத்தியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகசந்திப்பின் பின்னர் இரு அமைப்புக்களும் இணைந்து இந்திய இழுவைப் படகுகளின் வருகையினால் வட பகுதி மீனவர்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்திய மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட பிரதி நிதிகள் பங்கு பற்ற வேண்டும்.
கலந்துரையாடலில் எட்டப்படும் தீர்வு அரசியல் கட்சி சார்ந்ததாக அமையாமல் சுதந்திரமானதாக அமையவேண்டும்.
மீனவர்களின் பிரச்சினைக்கு இந்தியாவால் திணிக்கப்பட்ட தீர்வு எமக்கு வேண்டாம்.
இருநாடுகளுக்குமான சமத்துவமான தீர்வு வேண்டும். இரு நாட்டு மீனவ பிரச்சினை தொடர்பான விடயங்களில் கச்சதீவு பிரச்சினையை ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
இலங்கைக்குள் இழுவைப் படகு மீன்பிடி முறை முற்றாகத்தடை செய்யப்படுவதோடு சகல விதமான சட்டவிரோத மீன்பிடி முறைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பாக்கு நீரிணைப் பிரதேசத்தில் மட்டுமன்றி, மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவப் படகுககளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மீனவ பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் யாழ்.பல்கலைக் கழகத்தின் இத்துறை தொடர்பான கல்வியலாளர்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.
இரு நாட்டு மீனவ பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என்பனவாகும்.

Geen opmerkingen:

Een reactie posten