தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

அமெ­ரிக்­காவின் அர­சியல் சாணக்­கியம்!


ஆளும் கட்சிக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்- இளைஞன் தீக்குளிக்க முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 08:11.53 AM GMT ]
தயா மாஸ்டர் மற்றும் எம்.எம். சிராஸ் ஆகியோருக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட வாய்ப்பு வழங்காததை எதிர்த்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எம்.எம். சீராஸின் ஆதரவாளர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று சனிக்கிழமை இரவு வெளியான நிலையில் அதில் சீராஸ் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் , வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்திருந்தார்.
வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முக தேர்விலும் அவர் கலந்து கொண்டனர்.
தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லை. இதனையடுத்தே ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வார்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
இளைஞன் தீக்குளிக்க முயற்சி
சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தின்போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞனொருவர், “சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்” என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞனை தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த இளைஞனே இந்த மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெ­ரிக்­காவின் அர­சியல் சாணக்­கியம்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 08:17.45 AM GMT ]
திரு­கோ­ண­ம­லையில் இலங்கைக் கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டைக்கு அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் சிறப்புப் படைப்­பி­ரிவைச் சேர்ந்த அதி­கா­ரிகள் அளித்து வந்த ‘பிளாஷ் ஸ்ரைல்‘ பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்­தி­ருந்த போது, வாசிங்­டனில், ஐ.நா.வுக்­கான புதிய அமெ­ரிக்கத் தூது­வரின் நிய­மனம் தொடர்­பாக செனட் வெளி­வி­வ­காரக் குழு ஆராய்ந்து கொண்­டி­ருந்­தது.
இந்த இரண்டு விட­யங்­களும் ஒன்­றுடன் ஒன்று நேர­டி­யாகத் தொடர்­பு­டைய விட­யங்கள் அல்ல.
அதே­வேளை, கொஞ்சம் கூடத் தொடர்­பே­யில்­லாத விட­யங்­களும் அல்ல.
ஐ,நா.வுக்­கான தூது­வ­ராக இருந்த சுசன் ரைசை, வெளி­வி­வ­காரச் செய­ல­ராக்கும் முயற்­சியில் தோல்வி கண்ட அமெ­ரிக்க அதிபர் ஒபாமா, அண்­மையில் அவரை, செனட் ஒப்­புதல் தேவைப்­ப­டாத, வெள்ளை மாளி­கைக்­கான தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மித்தார்.
அதை­ய­டுத்து, ஐ.நா.வுக்­கான தூது­வ­ராக, சமந்தா பவரை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்தார் ஒபாமா.
ஆனால் இந்த நிய­ம­னத்­துக்கு, அமெ­ரிக்க செனட்டின் ஒப்­புதல் அவ­சியம்.
ஒபா­மா­வுக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வ­ராக இருந்த போதிலும், ஒபா­மாவின் ஜன­நா­யகக் கட்­சிக்கு சாதா­ரண பெரும்­பான்­மையே, இருந்­தாலும், செனட்டின் முழு­மை­யான ஆத­ர­வையும் நம்­பிக்­கை­யையும் சமந்தா பவர் பெற்­றுள்ளார் என்­பது தான் முக்­கி­ய­மா­னது.
கடந்­த­வாரம் செனட் வெளி­வி­வ­காரக் குழுவின் முன்னால், இவ­ரது நிய­ம­னத்தை அறி­வித்த, வெளி­வி­வ­காரக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ், சமந்தா பவரின் ஐ.நா. பணி இலக்­குகள் குறித்து விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.
அதன்­போது, சமந்தா பவரின் முன் உள்ள முக்­கிய விவ­கா­ரங்­களில், இலங்கை மனி­த­உ­ரிமை மீறல்கள் குறித்த விவ­கா­ரமும் ஒன்று எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இப்­போது சிரிய விவ­கா­ரத்­துக்கு அவர் முதன்மை கொடுக்க வேண்­டிய நிலையில் இருந்­தாலும், இலங்கை விவ­கா­ரத்­தையும் அவர் கைந­ழுவ விடப் போவ­தில்லை என்­பது இதன் மூலம் உறு­தி­யா­கி­யுள்­ளது.
பொஸ்­னியப் போரின் போது, ஊட­க­வி­ய­லா­ள­ராகப் பணி­யாற்­றிய சமந்தா பவர், தனது போர் அனு­ப­வத்தை வைத்து, எழு­திய நூலுக்கு புலிட்சர் விருது கிடைத்­தது என்­பதும், அவர் ஒரு மனி­த­உ­ரி­மைகள் சட்டவாளர் என்­பதும், மனி­த­ உ­ரிமை மீறல்கள், இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு எதி­ரா­னவர் என்­பதும், செனட்டில் அவ­ருக்குப் பல­மான ஆத­ரவு கிடைப்­ப­தற்கு முக்­கிய கார­ணங்கள்.
இதனால் தான், இலங்கை விவ­கா­ரத்தில், கடந்த காலத்தில் ஐ.நா. ஊடாக அமெ­ரிக்கா கொடுத்து வந்த அழுத்­தங்கள் மேலும் தீவி­ர­ம­டை­யுமே தவிர குறை­யாது என்ற வலு­வான நம்­பிக்கை அர­சியல் நோக்கர்க­ளி­டை­யேயும் ஏற்­பட்­டுள்­ளது.
ஏற்­கெ­னவே அமெ­ரிக்கா இரண்டு தட­வைகள் ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யுள்­ளது.
மூன்­றா­வது தட­வை­யா­கவும், இது­போன்ற தீர்­மா­னத்தை ஜெனீ­வாவில் அமெ­ரிக்கா கொண்டு வருமா என்று, இரா­ஜாங்கத் திணைக்­களப் பேச்­சா­ள­ராக இருந்­த­வரும், இப்­போது ஐரோப்­பிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்கச் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­வ­ரு­மான, விக்­ரோ­ரியா நுலன்ட்­டிடம் சில மாதங்­க­ளுக்கு முன்னர் செய்­தி­யா­ளர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.
அதற்கு அவர், அவ்­வாறு இல்லை என்றும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு அப்பால், இதை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்று இரா­ஜாங்கத் திணைக்­களம் ஆலோ­சிக்கும் என்று பதி­ல­ளித்­தி­ருந்தார்.
கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் முன்­னெ­டுப்­புக்கள் எதையும், இலங்கை அர­சாங்கம் இது­வரை மேற்­கொள்­ள­வில்லை.
எவ்­வா­றா­யினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்­க­வுள்ள 25வது அமர்வு வரையில் தான், இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஜெனீவா தீர்­மானம் கால­அ­வ­கா­சத்தைக் கொடுத்­துள்­ளது.
இத்­த­கைய நிலையில் தான், சமந்தா பவர், ஐ.நாவுக்­கான பத­வியைப் பொறுப்­பேற்­க­வுள்ளார்.
அதே­வேளை, வரும் செப்­டெம்பர் மாதம் 9ஆம் நாள் தொடக்கம், 27ம் நாள் வரை­யி­லான காலப்­ப­கு­தியில், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 24வது அமர்வு நடை­பெ­ற­வுள்­ளது.
இந்த அமர்­வுக்கு முன்­னர்தான், (ஓகஸ்ட் இறு­தி­ வா­ரத்தில்)  ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை, இலங்­கைக்குப் பயணம் மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்ளார்.
இந்தப் பயணம் அதற்கும் முன்­ன­தா­கவே இடம்­பெறும் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள போதிலும், அது குறித்த அதி­கா­ர­பூர்வ நிகழ்ச்சி நிரல் இன்­னமும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்த, வடக்கு மாகாண சபைத் தேர்தல், வரும் செப்­டெம்பர் இறு­தியில் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யிலும், அதற்கு முன்னர், ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு வர­வுள்ளார் என்­ப­தாலும், ஜெனீ­வாவில் நடக்­க­வுள்ள 24வது அமர்வும் இலங்­கைக்கு முக்­கி­ய­மா­ன­தா­கவே இருக்கும்.
இதில் இலங்கை தொடர்­பான, விவ­கா­ரங்கள் ஏதும் நிரற்­ப­டுத்­தப்­ப­டாத போதிலும், அதற்­கான வாய்ப்­புக்கள் இல்லை என்று நிரா­க­ரிக்க முடி­யாது.
ஏனென்றால், சமந்தா பவரின் நிய­ம­னமும், இலங்கை தொடர்­பான அவ­ரது நிலைப்­பாடும், நவ­நீ­தம்­பிள்­ளையின் பய­ணமும், 24வது கூட்­டத்­தொ­டரில் இலங்கை விவ­காரம் குறித்து எதுவும் எழுப்­பப்­ப­டாது என்று கரு­து­வ­தற்­கில்லை.
அந்தக் கால­கட்­டத்­தி­லேயே வடக்கு மாகாண சபைத் தேர்­தலும் நடக்­க­வுள்­ளது என்­பதால், அர­சாங்­கத்­துக்கு இது கடும் நெருக்­க­டி­யா­கவே அமையும்.
புதி­தாக, ஐ.நாவுக்­கான தூது­வ­ராக சமந்தா பவர் பத­வி­யேற்ற பின்னர், இலங்கை தொடர்­பான அமெ­ரிக்­காவின் நகர்­வுகள் இறுக்­க­ம­டை­யலாம் என்ற கருத்து உள்­ளது.
இத்­த­கைய நிலையில் தான், அமெ­ரிக்க கடற்­ப­டையின் பசுபிக் கட்­டளை பீடத்தை சேர்ந்த ‘சீல்‘ எனப்­படும் சிறப்புப் படையின் அதி­கா­ரிகள் பத்துப் பேர், இலங்கைப் படை­யி­ன­ருக்கு 18 நாட்கள் திருகோணலையில் சிறப்புப் பயிற்­சி­களை அளித்­துள்­ளனர்.
ஒரு­பக்­கத்தில், அமெ­ரிக்கா மனித ­உ­ரி­மைகள் குறித்துப் பேசி­னாலும் – இலங்கைப் படை­யினர் மனி­த­ உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சாட்­டி­னாலும், இன்­னொரு பக்­கத்தில், இலங்கைப் படையினருக்­கான பயிற்­சி­களை அளித்து வரு­கி­றது.
மனி­தா­பி­மானப் பயிற்­சி­க­ளையே இலங்கைப் படை­யி­ன­ருக்கு அளித்து வரு­வ­தாக அமெ­ரிக்கா கூறி­னாலும், அதை முழு­மை­யாக ஏற்றுக் கொள்ள முடி­யாது.
பயிற்­சிகள் எத்­த­கை­ய­தாக இருந்­தாலும், பயிற்சி அளிக்­கப்­ப­டு­ப­வர்கள் இலங்கைப் படை­யினர் தான்.
அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளை பீடம் இலங்கைப் படை­யி­ன­ருக்கு பல்­வேறு வழி­களில் பயிற்­சிகள், உத­வி­களைக் கொடுத்து வரு­கி­றது.
அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், இது­போன்ற இரட்டை நிலைப்­பாட்டைக் கடைப்­பி­டிப்­பது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மான விடயம் இல்லை.
இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்கா இறுக்­க­மான போக்கை கடைப்­பி­டிப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், இன்­னொரு பக்­கத்தில் அது இணக்­கத்­துக்­கான சமிக்­ஞை­களை கொழும்­புக்குத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்­டி­ருக்கும்.
அதுதான் அமெ­ரிக்­காவின் சாணக்­கியம்.
இலங்­கை­யுடன் முட்­டுப்­பட்டுக் கொண்­டாலும், அதை வெட்டி விட அமெ­ரிக்கா விரும்­பாது.
பாகிஸ்­தானை எடுத்துக் கொண்டால் அமெ­ரிக்­காவின் செல்­லப்­பிள்­ளை­யாக இருந்து கொண்டே, சீனா­வுக்கும் நல்ல பிள்­ளை­யாக நடந்து கொள்­கி­றது.
அவ்­வப்­போது சீனா விவ­கா­ரத்தில், தலி­பான்கள் விவ­கா­ரத்தில், ஆளில்லா விமானத் தாக்­கு­தல்கள் விவ­கா­ரத்தில், பாகிஸ்­தா­னுடன் முட்டிக் கொண்­டாலும், அந்த நாட்டை தனது கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கவே முனை­கி­றது அமெ­ரிக்கா.
அது­போ­லவே, இலங்­கை­யு­டனும், மனி­த ­உ­ரி­மைகள் விவ­கா­ரத்தில் மோதிக் கொண்­டாலும், பாது­காப்பு ஒத்­து­ழைப்பு விட­யத்தில் அமெ­ரிக்கா ஒரு­போதும் முரண்­பட்­டது கிடை­யாது.
பல சந்­தர்ப்­பங்­களில், புலி­களைத் தோற்­க­டிப்­ப­தற்கு அமெ­ரிக்கா உத­வி­க­ளையும் வழங்­கி­யுள்­ளது, ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யுள்­ளது.
அதே­வேளை, அமெ­ரிக்­கா­வுக்கு எப்­போ­துமே இரட்டை முகம் தான் உள்­ளது என்­பதைப் புரிந்து கொள்­வது முக்­கியம்.
அமெ­ரிக்கா மட்­டு­மல்ல இந்­தி­யாவும் கூட இதற்கு விதி­வி­லக்­கா­ன­தல்ல.
1980களின் தொடக்­கத்தில், இலங்கைப் படை­யி­ன­ருக்குப் பயிற்சி அளித்த இந்­தியா தான், விடு­தலைப் புலிகள் போன்ற தமிழ் இயக்­கங்­க­ளுக்கும் பயிற்­சி­களை கொடுத்­தது.
இப்­போதும், அர­சி­யல் ­தீர்வு உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் கொழும்­புடன் முரண்­பட்டுக் கொண்டாலும், ஆண்டுக்கு 800 படையினருக்குப் பயிற்சிகளை அளிக்கிறது இந்தியா.
வல்லரசுகள் எப்போதுமே, இப்படித் தான்.
பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிவிடும் கலை அவர்களுக்கு கைவந்த ஒன்று.
இந்த நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவராக சமந்தா பவர் பொறுப்பேற்றுள்ளதால் மட்டும், எல்லாமே மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், அமெரிக்காவின் அரசியல், பாதுகாப்பு. இராஜதந்திர நிகழ்ச்சி நிரல் என்பது அமெரிக்காவுக்கானதே தவிர, தமிழர்களுக்கானதோ, இலங்கைக்கானதோ அல்ல.
இலங்கையுடன் மோதுவதைவிட, நெருங்குவதே மிகவும் சாதகமானது என்ற கருத்து எந்தவொரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஏற்படுகிறதோ, அப்போதே இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அமெரிக்காவுக்கு மறந்து போய் விடும்.
இதுதான் அமெரிக்காவின் அரசியல் சாணக்கியம்.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten