[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 12:47.08 PM GMT ]
செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற பொலிசார், சம்பவம் நடைபெற்ற கடைக்கு அடுத்த கடையில் பணியாற்றுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிறுவனம் வவுனியா நகரில் பழைமை வாய்ந்தது என்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தின் பெறுமதி பல லட்சங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
மட்டக்களப்பில் 250ற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் பறிமுதல்- காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 01:01.14 PM GMT ]
இரவு வேளைகளில் கிராமங்களினுள் துவிச்சக்கர வண்டிகளில் டைனமோ இல்லாமல் சென்றவர்களின் துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிராமங்களினுள் மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் டைனமோ இல்லாத துவிச்சக்கர வண்டிpகளில் பல்வேறு வேலை நிமிர்த்தம் வெளியில் நடமாடிய பொதுமக்களை அவதானித்த களுவாங்சிகுடி பொலிசார் அவர்களி எந்த வித முன்னறிவித்தலுமின்றி, அனைவரினதும் வதுவிச்சக்கர வண்டிகளை பறித்து லொறி ஒன்றில் ஏற்றி களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் கூறிச் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை கிராமதினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியினுள் பலத்த அசௌகரியம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் பெரும் பீதியும் ஏற்பட்டது.
கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டம் மற்றும் மா, பலா, வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தியதுடன் சுமார் 50இற்கு மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தயுள்ளதாக அந்தக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கலக்கமுற்ற பொதுமக்கள் பட்டாசுகளை சுட்டும் சத்தங்களை எழுப்பியும் யானைகளை விரட்டியுள்ளனர்.
அரசாங்கம் கடந்த 2012 ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து யானைத் தொல்லையிலிருந்து பாதுகாக்க மின்சார வேலி அமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள போதிலும் இப்குதியில் இன்றுவரை அச்செயற்றிட்டம் கைகூடவில்லை எனவும் அந்தக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten