[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 06:11.45 AM GMT ]
இந்த கட்டடத்தொகுதி யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ். ஞானம்ஸ் விடுதியில் நேற்று நடைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தகவல் தருகையில்,
இந்தக் கட்டடத் தொகுதியில் வர்த்தக நிலையங்கள், திரையரங்கம், சொகுசு அறைகள், விருந்தினர் பகுதி, பார்வையாளர் அரங்கம் என்பன அமையவுள்ளன.
இதற்கென வடக்கு கிழக்கிலிருந்து 350 இளைஞர் யுவதிகளுக்கு, தமது நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்குக் கூட தமது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும், இதற்கு தமது நிறுவனம் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
யாழில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்க தொழில்தருநர்கள் முன்வரவேண்டும்: விஜயசிங்க
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்வழங்கல் தொடர்பாக தொழில்தருநர்களிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகிறோம் என்று இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் உபதலைவர் கனிஸ்ட விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். ஞானம்ஸ் விடுதியில் நேற்று நடைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
எண்பது வருடங்கள் இலங்கையில் சேவையாற்றியுள்ள எம்புளேயஸ் பெடரேசன் ஒப் சிலோன் நிறுவனம் இன்று முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் கூட்டுமுயற்சியாக வணிக சமூகத்தினரை சந்தித்து தொழில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டின் மூலம் தொழிலாளர்களின் நம்பிக் கையை கட்டியெழுப்பி தொழில் விருத்தியை மேற்கொள்ள முடியு மென்று நம்புவதாகவும் தொழில் தருநர் என்ற வகையில் நீங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உங்கள் நிறுவனங்கள் போன்று இலங்கை பூராவும் உள்ள 33 நிறுவனங்களில் தொழில் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கல் தொடர்பாக தொழில்தரு நரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
யாழ். வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பூரணச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் யாழ். மாவட்டத்தில் சுமார் 8000 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக பிரதேச செயலக புள்ளிவிபரங்கள் மூலமாக தெரியவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இவர்களில் 37 வீதமானவர்கள் பிறவியில் அங்கவீனர்களாகவும் 63 வீதமானவர்கள் நோய் அல்லது அனர்த்தம் காரணமாக அங்கவீனர்களாகவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயலமர்வில் தொழில் பயிற்சியை நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ். வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பூரணச்சந்திரன் மற்றும் நிறுவனத் தலைவர் இந்தச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பெருமளவு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வடக்கில் அரசுக்கும் த.தே.கூட்டமைப்புக்குமிடையில் கடும் போட்டி நிலவும்: டிலான் பெரேரா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 06:03.19 AM GMT ]
பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் போட்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை தம் பக்கம் இழுத்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கில் ஏற்படும் தோல்வியை மறைப்பதற்காகவே அரசாங்கம், பதவிக்காலம் முடிவதற்குள் வடமேல், மத்திய மாகாணங்களை கலைத்து தேர்தல் நடத்துவதாகவும் அந்த கட்சி கூறியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten