[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 01:31.43 AM GMT ]
அமரர் மகேஸ்வரனின் சகோதர்களில் ஒருவரான தியாகராசா துவாரகேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாவட்டத்திலும், மற்றைய சகோதரரான தியாகராசா விக்னேஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிந்த போதிலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை!– அனுரகுமார - அரசியல் சாசனமும் இனவாதத்தை தூண்டுகின்றது!– ஜே.வி.பி.
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 02:50.29 AM GMT ]
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை என ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளர்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
குமரன் பத்மநாதன் விடுதலை செய்யப்பட்டார். எனினும் கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
வடக்கில் பாரியளவில் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது. போர் ஏற்படுவதற்கும் இது ஓர் முக்கிய காரணியாகும்.
வடக்கு காணிகளை அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு வழங்காது. பிணக்குகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
பௌத்த பிக்குகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியது யார்?
இனவாதத்தை தூண்டி குழப்ப நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டை பற்றி கவலைப்படுவதில்லை மாறாக அதிகாரம் பற்றியே கவலைப்படுகின்றனர்.
மாகாணசபை முறைமையை ரத்து செய்து, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி அரசியல் சாசனமும் இனவாதத்தை தூண்டுகின்றது – ஜே.வி.பி.
இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி அரசியல் சாசனமும் இனவாதத்தை தூண்டி வருவதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையினால் ஏற்பட்டக் காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாத கருத்துக்களுக்கு இடமில்லை.
தேசிய இனப்பிரச்சினையை மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரே தலைவர் ரோஹண விஜேவீர மட்டுமே.
இந்திய தலையீட்டுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தார்.
சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென விஜேவீரவே முதலில் கோரினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இரண்டு தரப்பினருக்கு இடையிலான இணக்கப்பாடு வழியமைக்காது.
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten