தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள்! தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு! - தயா மாஸ்டர்


பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ய ஒப்பந்தம்- பசுவதைச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 02:00.28 AM GMT ]
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பதவி வகிக்கும் அதிகாரிகளை கொலை செய்ய ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் இவ்வாறு, ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளை கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் வெலோ சுதா என்ற பிரபல பாதாள உலக்க குழு உறுப்பினரே ஒப்பந்தத் வழங்கியுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
பசுவதைச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
பசுவாதைச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறைச்சிக்காக பசுக்கள் வதம் செய்யப்படுவதனை ரத்து செய்யும் நோக்கில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன.
சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி, ஏற்கனவே சட்டவாக்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உத்தேச சட்டத்தை உருவாக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசு வதைச் சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ஏற்கனவே சிஹல ராவய அமைப்பிற்கு வாக்குறுதி அளித்திருந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள்! தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு! - தயா மாஸ்டர்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 09:41.33 PM GMT ]
இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும்.
அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது என தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
போருக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வட மாகாண சபை நிர்வாகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும் என்று தெரிவித்த தயாமாஸ்டர்.அரசியல் செயற்பாடுகளைப் பாராளுமன்றத்தினூடாக முன்னெடுக்கும் அதே நேரம் மாகாண சபையின் மூலம் அபிவிருத்திகளையே மேற்கொள்ள முடியும்.
அந்த அபிவிருத்திப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டுமென்பதால், ஆளுந்தரப்புடன் இணைந்து வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் யதார்த்தம் என்று தெரிவித்த தயாமாஸ்டர், மாகாண நிர்வாக அலகு நல்லதொரு முறைமையாகும்.
அப்போதைய யுத்தச் சூழ்நிலையில் அதனைப் பலப்படுத்த முடியாமற்போய்விட்டது.
இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும்.
அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. தமிழர் தலைவர் செல்வநாயகம் அரசுடன் நடத்திய இணக்கப்பாட்டு முயற்சிகள் வெற்றிபெறாததால், ஆயுதப் போராட்டங்கள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டன.
அதில் விடுதலைப் புலிகள்தான் ஒட்டுமொத்தமாக நின்று போராடினார்கள். இறுதியில் நாம் அந்தப் போராட்டத்தில் தோற்றுவிட்டோம்.
ஆகவே, காலச் சக்கரம் சுழன்று மீண்டுமோர் அரசியல்வாதிகளின் கரங்களுக்குள் பிரச்சினை வீழ்ந்திருக்கிறது. இன்றைய நிலையில் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமாகவே எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten