தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juli 2013

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு


வாகரை டிப்போவுக்கு புதிய பஸ் வண்டி அன்பளிப்பு - மன்னாரில் மீன்பிடிக்க சென்ற இருவரை காணவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 05:55.48 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை பஸ் டிப்போவானது உபஸ் டிப்போ என்ற வகையில் இயங்கி வருகின்றது.
இங்கு கிட்டத்தட்ட 13 பஸ் வண்டிகள் உள்ள வேளையில் இரண்டு மாத்திரமே பாவனைக்கு உகந்ததாக உள்ளது. ஏனையவை ஒரு சில அடிக்கடி திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படுகின்றது. பல பஸ் வண்டிகள் திருத்தப்படாமல் கட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் உப பஸ் டிப்போவை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகவும் தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடனும் சென்று பார்வையிட்டு இதன்பின் தேவைகள் குறித்து அறிந்து கொண்டார்.
இதேவேளை இங்கு உள்ள பஸ் வண்டிகள் யுத்த வேளையில் வழங்கப்பட்டதாலும் அப்போது வீதிகள் ஒழுங்கின்றி காணப்பட்டதாலும் இவை தற்போது பழுதடைந்து உள்ளதாகவும் பஸ் டிப்போ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அத்துடன் புதிய பஸ் வண்டிகளை வழங்க வேண்டும் என்றும் மூன்று இலட்சம் ரூபாவை தற்போது பஸ் திருத்த வேலைக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் போக்குவரத்து அமைச்சர் கோரிய உதவிகளை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார். அதன் பின் ஒரு புதிய பஸ் வண்டியை வாகரை உப டிப்போவுக்கு வழங்கி உள்ளதுடன் இங்குள்ள பஸ்களை திருத்துவதற்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதியை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி உள்ளார்.
தற்போது ஒரு புதிய பஸ் வண்டி வாகரை பஸ் டிப்போவுக்கு கிடைத்ததையிட்டு வாகரை பஸ் டிப்போ நிர்வாகமும் வாகரைப் பிரதேச மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்
மன்னாரில் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தலைமன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மீனவர்கள் மன்னார், பேசாலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என பொலிஸார் கூறினர்.
பேசாலையை சேர்ந்த 38 வயதான டியூரன் அப்புகாமி , 26 வயதான கமால்டீன் சமீன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை கடற்படையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தலைமன்னார் தெரிவித்தனர்
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 05:58.48 AM GMT ]
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று பொலி கண்டியில் இடம்பெற்றுள்ளது.
பத்திரகாளி கோயிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் பிரசாத் (வயது - 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பிரஸ்தாப இளைஞன் தனது வீட்டு மாமரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை மாமியார் கண்டு அயலவரின் உதவியுடன் அவரை மீட்டு மந்திகை ஆதார வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுக்காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சடலம் மரண விசாரணைக்காக மந்திகை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Geen opmerkingen:

Een reactie posten