தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

தெரிவுக்குழு புஸ்வாணம்! இந்தியாவின் அழுத்தம் காரணமா? - தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன்!- வீரவன்ச

பாதுகாப்பு தரப்பினரின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவில் ஒட்டுக் கேட்கப்படுகின்றது
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:51.05 AM GMT ]
இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒட்டுக் கேட்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பயின்கெப் என்னும் இடத்திலிருந்தே இவ்வாறு ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவே இவ்வாற இரகசியமாக அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது ரஸ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் இந்தத் தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரபுக்கள் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு ஒட்டுக் கேட்கப்படுகின்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலியாவில் காணப்படும் இரகசிய மையம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெரிவுக்குழு புஸ்வாணம்! இந்தியாவின் அழுத்தம் காரணமா? - தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன்!- வீரவன்ச
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:50.56 AM GMT ]
13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 2வது அமர்வு நேற்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றது.
பொதுமக்களிடம் இருந்து கருத்தைப் பெற்று திருத்தங்களை செய்ய, அரசதரப்பு பிரதிநிதிகளை மட்டுமே உள்ளடக்கிய தெரிவுக்குழு முன்னதாக முடிவு செய்திருந்தது.
இதுதொடர்பான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதுடன், வரும் ஓகஸ்ட் 15ம் திகதிக்குள் கருத்துகளைத் தரும்படியும் கேட்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தெரிவுக்குழுவின் 2வது அமர்வு நேற்று நடைபெற்றபோது, ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொதுமக்களுக்கான இந்த அறிவிப்பு தெளிவற்றிருப்பதாக உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், மீண்டும் தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான காலஅவகாசத்தையும் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தெளிவான அறிவிப்பை மீண்டும் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்தை தெரிவிப்பதற்கு ஒரு மாதகால அவகாசத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஐதேக, ஜேவிபி என்பன ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் இறக்கக் கூடாது என்று இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்திருந்தது.
இதையடுத்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் வரை பிற்போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன் � விமல் வீரவன்ச எச்சரிக்க
காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட சில முக்கியமான விவகாரங்கள் குறித்து துரிதமாக தீர்வு காணத் தவறினால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து விலகி விடுவேன் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். 
கடந்தவாரம் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,
இரண்டு அல்லது அதைவிட அதிகமான மாகாணசபைகளை இணைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அத்துடன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாகவும் தெரிவுக்குழு உடனடியாக ஆராய வேண்டும்.
இவை குறித்து முன்னுரிமை கொடுத்து, துரிதமாகவும், கலந்துரையாடத் தவறினால், தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் அர்த்தமில்லை.
அடுத்த மூன்று அல்லது நான்கு அமர்வுகளில் இந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆராயப்படவில்லையென்றால், தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten