தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

ஜப்பானிய உள்துறை அமைச்சர் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு! 13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும்! ஜப்பானிய அமைச்சர்

தவறான அழைப்பால் ஏற்பட்ட காதலால் கொலையாளியான முஸ்லிம் இளைஞர்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:07.44 PM GMT ]
தவறுதலாக எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் காதலித்த பெண்ணுக்கு நோன்பு பெருநாளுக்கான புதிய ஆடையை கொள்வனவு செய்து கொடுக்க தேவையான பணத்தை புரட்ட பெண்ணொருவரை கொலை செய்த 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் கழுத்தை நெரித்துவிட்டு, கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், அந்த பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நவலப்பிட்டி பலாந்தொட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது.
பலாந்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற இந்த இளைஞரின் செல்லிடப் பேசிக்கு கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் யுவதி ஒருவரிடம் இருந்து வந்த தவறுதலான அழைப்பின் பின்னர், இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி காதலித்துள்ளனர்.
அந்த யுவதி நோன்பு பெருநாளுக்கு புதிய ஆடையை வாங்கி தருமாறு, இளைஞரிடம் கேட்டுள்ளார்.
ஆடையை கொள்வனவு செய்ய பணமில்லாத நிலையில், அந்த இளைஞர் பலாந்தொட்ட பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளார்.
கழுத்து நெரிக்கப்பட்டால், மயக்கமடைந்த பெண் உயிரிழந்து விட்டார் என நினைத்த இளைஞர் பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றியுள்ளார்.
சற்று நேரத்தில் அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்துள்ளது, இதனையடுத்து, அந்த இளைஞர் வீட்டில் இருந்த கத்தியொன்றை எடுத்து பெண்ணை குத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இளைஞர், நவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எல்.கே. மகிந்த உத்தரவிட்டார்.
ஜப்பானிய உள்துறை அமைச்சர் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு! 13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும்! ஜப்பானிய அமைச்சர்
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:43.57 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய உள்துறை மற்றும் தொடர்பாடல் துறை அமைச்சர் யோஷிதகா ஷின்டோ இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இருவரும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் தொடர்பாடல் துறை மற்றும் பொருளாதார துறைகளில் மேலும் அதிகரிக்கும் வழிகள் பற்றியும் இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கையிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை நினைவுகூர்ந்த ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் மக்கள் அதனை பாராட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
அதேவேளை ஜப்பானிய அமைச்சர், இன்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை அவரது அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும்
13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் என ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யோஷிதகா ஷின்டோ தெரிவித்தார்.
இது ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். இதனால் குறித்த நாடே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இடம்பெற வேண்டும் என ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யோஷிதகா ஷின்டோ கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன்போது 13வது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜப்பானிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதே எனது விஜயத்தின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
மிக விரைவில் இது தொடர்பான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் இதற்காக ஒதுக்கப்படவுள்ள நிதி, இதுவரைக்கும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த உதவிகள் கல்வி, நிதி, மேம்படுத்தல் என பல வகையில் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்ப்பதற்கு இலங்கையும் ஜப்பானும் கவனம் செலுத்துகின்றன' என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten