தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juli 2013

வட மாகாண சபை தேர்தல்! ஈ.பி.டி.பி யின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 12:04.06 AM GMT ]
மும்பையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் 2006 ஜனவரி 25ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்த போது சிவானந்தன் என்பவர் தனது சூட்கேசில் 2.7 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிவானந்தத்துடன் சேர்த்து சுந்தர், வசந்தராஜா, சிவராஜ், காளி மற்றும் நாதன் ஆகியோரும் போதைப் பொருள் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.
இந்த ஆறு பேரில், சுந்தர், காளி, நாதன் ஆகியோர் தலைமறைவாகினர்.
சிவானந்தன், வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகிய மூவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருந்தமை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி வி.ராமமூர்த்தி விசாரித்து வந்தார்.
அரசு சார்பில் சிறப்பு வழக்குரைஞர் என்.பி.குமார் ஆஜரானார்.
வழக்கின் இறுதி விசாரணையில் வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிவானந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வட மாகாண சபை தேர்தல்! ஈ.பி.டி.பி யின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 11:42.23 PM GMT ]
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள ஈ.பி.டி.பி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் இலங்கையின் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்பாளர் தெரிவு நடைபெற்று நேற்று திங்கட்கிழமை மாலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபையின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன்,
ஈழ.மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், ஏ.சூசைமுத்து,
ஈழ. மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சுந்தரம் திவகர்லால்,
ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின்,
சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுஷாங்கன்,
பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன்,
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
 ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வட மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியான பொதுசன ஐக்கிய மக்கள்  முன்னணியுடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten